யுத்தகுற்ற விசாரணைக்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையால், சிறிலங்காவின் நேர்மை தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராட் செயிட் அல் ஹ{சேன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு சிறிலங்கா அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

அனால் சிறிலங்கா அரசாங்கம் இதனை கண்டுக்கொள்வதாக இல்லை.

அதேநேரம் இந்த விசாரணைக்கு ஒத்துழைக்கின்றவர்களையும் கைது செய்தும், அச்சுறுத்தியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு புறம்பாக செயற்பட்டு வருகிறது.

இது கண்டனத்துக்குரியது.

இதேவேளை சிறிலங்காவின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றமை தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டி இருப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.