கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் November 8, 2014 News தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபையின் உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீடிர் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. எம்.கே சிவாஜிலிங்கம் அவர்கள், தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர். இலங்கை அரசாங்கத்தின் பிடியில் இருந்த தேசிய தலைவரது, பெற்றோர் இறந்தவேளை அவர்களின் உடலை வல்வைக்கு எடுத்துச் சென்று , உரிய மரியாதையோடு தகனம் செய்தது எம்.கே.சிவாஜிலிங்கம் தான் என்பதனை எவரும் மறந்துவிட முடியாது.கடந்த மாவீரர் தினத்தன்று, மாவீரர்களுக்கு தீபம் ஏற்ற முற்பட்டு சிங்கள இராணுவத்தோடு முறுகல் நிலைதோன்ற இவரே காரணமாகவும் அமைந்திருந்தார். ராணுவத்தின் பல அச்சுறுத்தல் அவருக்கு இருந்து வரும் நிலையில் கூட, தமிழ் ஈழமே இறுதித் தீர்வு என்ற முடிவில் உறுதியோடு வாழ்ந்து வரும் நபர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்