கேணல் பருதியின் படுகொலைக்கு நீதி கேட்டு இடம்பெற்ற பேரணி ஒன்று முன்னெடுக்கபட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நீதிக்கான பேரணி கம்பர்த்தா என்னும் இடத்தில் ஆரம்பித்து 08.11.2012ல் அவர் வீரமரணம் அடைந்த இடத்தில் சென்று முடிவடைந்து.

அங்கு சுடர் ஏற்றி மலர் கொண்டு மக்கள் வணக்கம் செலுத்தினர். நினைவு உரையினை அவருடைய மகள் சாரா பிரெஞ்சு மொழியில் வழங்கியிருந்தார். கேணல் பரிதி அவர்களின் 2-ஆம் ஆண்டு நினைவு அறிக்கை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் வாசித்தார்.
அதன் பின்னர் அத்திடலில் பேராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் எழுதிய புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் என்ற நூல் அறிமுகத்தை திரு. சத்தியதாசன் அவர்களால் செய்து வைக்கப்பட்டு போராசிரியர் முருகர் குணசிங்கம் அவர்கள் வழங்க பேராசிரியர் அறிவரசன் அவர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள அதனைத் தொடர்ந்து கட்டமைப்பைச் சேர்ந்தவர்களும், மக்களும் பெற்றுக்கொண்டனர்.
நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத்தாகம் உறுதியுரையுடன் நினைவேந்தல் நிகழ்வு நிறைவு பெற்றது.