சிறீலங்காவின் அலட்சியம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் செயீட் ராட் அல் ஹசைன் முன்வைத்த விமர்சனங்களுக்கு ஐக்கியநாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறீலங்கா ஒத்துழைக்காமையானது, ஐக்கிய நாடுகள் சபைக்கு புறம்பாக செயற்படும் செயற்பாடும் என்றும், இதனால் சீறிலங்காவின் நேர்மை தன்மை குறித்து அவநம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறி இருந்தார்.

இதற்கு சிறீலங்காவின் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பினார்.

ஆனால் ஆணையாளரினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு பான் கீ மூன் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருப்பதாக அவரது பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.