சவூதி அரேபியா தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. November 12, 2014 News இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களுக்கு சவூதி அரேபியா ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியா இலங்கை அரசாங்கத்தின் நண்பன் எனவும், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் நண்பனல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்திலும் சவூதி அரேபியா இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அதற்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீட்டுப் பணிப்பெண்ணாக மத்திய கிழக்கிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் சில இலங்கைப் பெண்கள் சவப்பொட்டியில் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.