600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன? சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய்! சென்னையில் போராட்டம் November 16, 2014 News எட்டு தமிழ் மீனவர்கள் மீதான தூக்கை இரத்து செய்து விடுதலைசெய்யக்கோரி இன்று மே 17 இயக்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன போராட்டம் நடை பெற்றது. இதில் நூற்றுக்கணக்கனவர்கள் கலந்து கொண்டனர். இதில் 600 க்கும் மேற்பட்ட படுகொலைகளுக்கு நீதி என்ன? சிங்கள கடற்படை தளபதிகளை கைது செய். தமிழர் பெருங்கடலை பாரம்பரிய மீன்பிடி பகுதியாக அறிவி. இந்திய இலங்கை கூட்டினை வன்மையாக கண்டிக்கிறோம். என்று கோசங்கள் எழுப்ப பட்டது.