ஈழத் தமிழரின் வலிகள் அதிகமானவை. அவற்றின் புரிதல் சுவிஸ் மக்களிடம் மிக மிக குறைவு. அவற்றின் புரிதலும் தமிழரின் அங்கிகாரமும் இன்றைய நாட்களில் மிக மிக அவசியம். அதற்கான ஒரு களமாகவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என சோசலிச ஜனநாயகக் கட்சி (SP) கட்சியின் வேட்பாளர் திருமதி தர்ஷிகா தெரிவித்தார்.

 எமது வலிகள் பாதிப்புக்கள் நிச்சயம் வெல்லும். இன்று வரை வேறுபாடின்றி சுவிட்சலாந்தில் பணி செய்யும் கட்சி சோசலிச ஜனநாயகக் கட்சி என்றால் மிகையாகாது என சுவிஸ்சலாந்து நாட்டின் பேர்ண் மாநில தூண் பிரதேச சபைக்கான தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான சோசலிச ஜனநாயகக் கட்சியின் (SP) சார்பில் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன் வடிவேல் தெரிவித்தார்.

இவருடன் தூண் பிரதேச சோசலீச ஜனநாயகக் கட்சியின் (SP) தலைவர் SCHORI FRANZ அவர்களும் கலந்து கொண்டிருந்ததுடன், மனித உரிமை மீறல்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கை அரசியலில் தனி மனிதனிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட கூடாது. அது, பகிரப்பட வேண்டும் என இருவரும் தெரிவித்தார்கள்.