வடக்கில் யுத்தம் காரணமாக சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டு எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வடமாகாணசபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

19 ஆவது மாதாந்த சபை அமர்வு இன்று நடைபெற்றிருந்த நிலையில் அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் குறித்த பிரேரணயினை சபையில் பிரேரித்திருந்தார்.

யுத்தத்தின் போது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 8தொடக்கம் 15 வருடங்களாக விசாரணைகள் இன்றி தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிந்து 5வருடங்கள் ஆகியும் விடுதலை செய்யும் நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. மேலும் யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் விடுதலை தொடர்பில் எதுவித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. எனவே ஜனாதிபதி, நீதியமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணையினையினை வடக்கு முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் வழிமொழிந்ததுடன் கைதிகள் விடுதலை தொடர்பில் சபையில் தீர்மானம் இயற்றுவது சரியானது என்றும் வெலிக்கடை சிறைக்கு சென்று தான் பார்வையிட்டதாகவும் கைதிகளுடன் கலந்துரையாடினதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , சயந்தன் , பசுபதிப்பிள்ளை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஆகியோரும் உரையாயாற்றியிருந்தனர் .