எமது இனத்தின் விடுதலைக்காக மாவீரர்களின் ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் தேசிய மாவீரர் நாளில் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு வணக்கம் செலுத்துவோம் .

எமது மாவீரர்கள் மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் தம் உயிருள்ளவரை போராடினார்கள். உலகின் பலம் பொருந்திய சக்திகள் யாவும் ஒன்று திரண்டு எதிரிக்குப்பலமாக நின்ற போதும் அஞ்சாது போராடினார்கள். உலகின் எப்பாகத்திலும் நிகழ்ந்திராத ஆச்சரியப்படத்தக்க வீரம்செறிந்த செயற்பாடுகளை அவர்கள் புரிந்தார்கள். இருப்பினும் அவர்கள் தமக்கென எதையும் வேண்டி நிற்கவில்லை. ஏன்? தமக்கென ஒரு புதை குழியைக் கூடத் தேடாதவர்களும் தம்முகம் காட்டாது மறைந்து போனவர்கள்.

அந்த மாவீரர்களின் மகத்தான தியாகங்களை போற்றி வணங்க ஒவ்வொரு நாடுகளிலும் உணர்வோடு ஒன்றுகூடுவோம் .

மேலதிக தொடர்புகளுக்கு : நாடுகள் வாரியான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு