நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு. November 23, 2014 TCC 22.11.2014 மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு தமிழிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடாத்தப்பட்டது இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அகவை பேதமின்றி கலந்து கொண்ட மக்கள் தேச விடுதலைக்காக விதையாகிப்போன மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்துகொண்டனர். ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடுபவன் தன்னுடைய இலக்கை எட்டும் வரை உறுதிகுலையாது போராடவேண்டும் என்பதர்க்கு சான்றாக எம் கண்முன் தோன்றி மறைந்த மாவீர்களை பெற்றெடுத்தவர்கள் அவர்களோடு கூடபபிறந்தவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அவர்கள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் மதிப்பளிக்கப்பட்டு நினைவுச்சான்றாக தேசியக்கொடியும் தேசியமலரான காந்தள் மலர் பொறிக்கப்பட்ட சால்வையும் வழங்கப்பட்டது.