23.11.2014 மாவீரர் வாரத்தில் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டு பிரிவால் மாவீரர்நினைவாக கரபந்தாட்ட சுற்றுக்கிண்ண போட்டி நடாத்தப்பட்டுள்ளது இப்போட்டியானது 4பேர் கொண்ட குழுக்களுக்கும் 6 பேர் கொண்ட குழுக்களுக்கும் நடைபெற்றது.

maa-1maa-2
இப்போட்டியில் பதினாறு அணிகள் பங்குபற்றியிருந்தனர் இதில் 4பேர் கொண்ட குழுவிலும் 6பேர் கொண்ட குழுவிலும் ழுதலாம் இடத்தை டிறம்மன் தமிழ் விளையாட்டுக்கழகம் தட்டிக்கொண்டது 4 பேர் கொண்ட குழுவில் இரண்டாம் இடத்தை டென்மார்க் அணியும் 6பேர் கொண்ட குழுவின் இரண்டாம் இடத்தை லோறன்ஸ்குக் தமிழ் விளையாட்டுக்கழகமும் இரண்டு பிரவிலும் மூன்றாம் இடத்தை புருசோத் தமிழ் விளையாட்டுக் கழகமும் தட்டிக்கொண்டனர்.

maa-4maa-3
மிகவும் சிறப்பாக நடைபெறுவதர்க்கு அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கிய அனைத்து விளையாட்டுக்கழக வீரர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றது.
அதேவேளை தேசத்தின் சிரிப்பிற்காய் விதையாகி விழ்ந்த வீரர்களின் நினைவுகளை மீட்டிக்கொள்ளும் மாவீரர் வாரத்தில் அவர்களின் கனவுகளை சுமந்து செல்வோமென உறுதி எடுத்துக்கொள்கின்றோம்.