திபெத்திய மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் விதமாக பாடல்களை பாடிய பிரபல திபெத்திய பாடகர் கைது December 2, 2014 News திபெத்திய மக்களை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்கும் விதமாக பாடல்களை பாடிய பிரபல திபெத்திய பாடகருக்கு கல்சாங் யார்பெல்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல பாடகர் கல்சாங் யார்பெல் (39) திபெத்திய மொழியை மக்கள் பேச மற்றும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல்களை அங்கு நடந்த கச்சேரி ஒன்றில் பாடியிருக்கிறார். இந்நிலையில், இவர் பாடியது அரசியல் உள்நோக்கம் கொண்டதாக கூறி சிசுவான் மாகாண நீதிமன்றம் அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை அறிவித்துள்ளது. இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த அவரது உதவியாளருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை இந்தியாவை சேர்ந்த திபெத்திய இணையதளமான phayul.com வெளியிட்டுள்ளது.ஏற்கனவே, பாடகருக்கு கல்சாங் இதே அரசியல் தொனியிலான பாடல்களை கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தொடர் இசைக்கச்சேரியில் பாடியிருக்கிறார். 2013-ல் திபெத்திய தலைநகர் லாசாவில் இதேபோன்ற பாடல்களை பாடியதற்காக கல்சாங் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.