வடமாகாண மழை வெள்ளப் பாதிப்பு! 300 குடும்பங்கள் என குறைத்து மதிப்பீடு! December 3, 2014 News வடமாகாணத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்ற மக்களை சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறைத்து கணிப்பீடு செய்துள்ளது. மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கடுமையான மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் 2000க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.எனினும் மழை காரணமாக 300 குடும்பங்கள் மாத்திரமே வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்து வருகிறது.