இந்தியாவை சுற்றியுள்ள பல நாடுகளின் துறைமுகங்களில் சீனா முன்னெடுத்துவரும் உட்கட்டமைப்புத் திட்டங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஆர்.கே டோவன் தெரிவித்துள்ளார்.

சீனாவின் இவ்வாறான நடவடிக்கையால் சில தாக்கங்கள் உண்டாகலாம் என்பதால் இந்த விடயம் குறித்து நாங்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்,என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட உட்கட்டமைப்புஅபிவிருத்தி திட்டங்கள் என்ன அடிப்படையில் முன்னெடு;க்கப்படுகின்றன,என்பது மிகமுக்கியம் என்றும் தெரிவித்துள்ள அவர் எமது கடற்பிராந்தியத்தில் இடம்பெறும் சகலவகையான நடவடிக்கைகளையும் நாங்கள் நிச்சமாக அவதானிக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்து சமுத்திரத்தில் சீனாவின் கடற்படை கலங்கள் குறித்த அச்சத்தை நிராகரித்துள்ள அவர்,தகடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே அவை ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்துசமுத்திரப் பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் பொருட்கள் எடுத்துச்செல்லப்படுவதால் 2008 முதல் சீனா கடற்படை இப்பகுதியில் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.18 சீனா கப்பல்கள் கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனா நீhமூழ்கிகளை அவ்வப்போது இந்த நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.