நாமும் செய்தியாக, தமிழர் காணிகள் அபகரிப்பு, தமிழின அழிப்பு மற்றும் தமிழீழ ஆக்கிரமிப்பு என சிறிலங்கா அர சின் அராஜகத்தையும், தமிழ்நாட்டு ஆக்கிரமிப்பு தமிழின அழிப்பு, மற்றும் இந்திய அரசு தமிழர் காணிகளை அபகரிக்கின்றனர் என இந்திய அர சின் அராஜகத்தையும் செய்திகளில் அன்றாடம் போடுகின்றோம். எமது நிலம் எமது தேசம் காணமல் போய்விடவில்லை, அதே இடத்தில் தான் இருக்கிறது. நாம் தான் தமிழர் ஒருமை இன்மையால், தமிழர் பலம் இன்மையால் எல்லாவற்றையும் இழந்து வருகின்றோம்.

இன்றும் எமது தேசங்கள் அதே இடத்தில் இருக்கிறது. அதை நாம் எதிரிகளிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டுமெனில் எமது பலம், இன ஒருமை, ஒத்த கருத்து இவற்றை நாம் முழுமைபடுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் மீதேன் வாயுவை தமிழர்கள் தனித்துவமாக எடுத்து எமது கட்டுப்பாட்டில் விற்பனை செய்தால் நாமும் மிக பலம் பொருந்திய நாடாகவும் செல்வந்த நாடாகவும் வர முடியும். அதே வளத்தை நாம் அன்னியர்களின் கைகளில் விட்டால் எமது தேசங்கள் எந்த மாற்றமும் இல்லாது ஏழ்மை நிலையையே அடையும். இன்று ஐரோப்பா மீது ரசியா செலுத்தும் ஆதிக்கமே இந்த மீதேன் வாயுவை வைத்துதான். இப்படியான வளங்கள் இருக்குமெனில் நாம் அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும்.

தமிழர்கள் பூமி வளமுள்ள பூமி என்பதற்கு அப்பால் உலகில் உள்ள எந்த இனத்துக்கும் இல்லாத அதி சிறந்த பழக்கம் என கருதப்படும் கடின உழைப்பு என்கின்ற பழக்கம் தமிழர்களுக்கு இருக்கிறது. எமது மனித உழைப்பை வைத்துதான் இன்று உலகில் பல நாடுகள் இயங்கி கொண்டு இருக்கிறது. அதே மனித வலுவை நாம் சரியாக பாவித்தால் தமிழர்கள் மிக உயரத்தில் இருப்பார்கள். இன்று அரபி தேசத்தில் ஜொலிக்கின்ற கட்டிடங்களின் அழகுக்கு பின்னால் ஒவ்வொரு தமிழனின் உழைப்பு இருக்கிறது. அந்த கட்டிடத்தை வடிவமைதவனும் தமிழனாக இருப்பார் அதை கட்டிய தொழிலாளியும் தமிழனாக இருப்பார். இதை நாம் எமது தேசத்தில் செய்ய சுதந்திரம் பெற்றாலே சாத்தியமாகும்.

எமது தேசத்தை அபகரித்துள்ள அன்னியர்களை விரட்டி நாம் எம்மை எமது தேசத்தில் நிலை நிறுத்திக் கொண்டாலே எதுவும் சாத்தியம் இவ் உலகில்.

தமிழ்நாடும் தமிழீழமும் தனி நாடாகுமெனில் நாம் உலகில் மிகப் பலம் பொருந்திய செல்வந்த நாடாகவும் மனித நேயம் மிக்க நாடாகவும் உலகில் இருப்போம். தமிழ் கூலிகள் என்ற கருத்து மாறி தமிழ் சுற்றுலா பயணிகள் என்று தமிழரை உலகம் எல்லாம் அழைக்கும் காலமாக மாறும்.

தமிழர்களே இந்தியா, ஸ்ரீ லங்கா இரண்டும் எம்மை அடிமைபடுத்தியுள்ள நாடுகள். நாம் இந்த விடயத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

ஒருமை, ஒத்த கருத்து, தெளிவு இருக்குமெனில் நாம் எல்லாவற்றையும் மீட்டெடுக்க முடியும். தமிழர்களிடம் இருக்கும் கருத்து தமிழர் ஒருமை சாத்தியம் இல்லை என்று அது தவறு. எதிரிகளே எம்மை பிரித்தார்கள். நாம் தெளிவாக இருக்க பழகிக் கொண்டால் ஒருமையாக இருப்பது தானாக மலரும். தமிழீழ விடுதலை புலிகளை சில தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை ஆனால் அவர்கள் களங்களில் வெறிகளை ஈட்டும் போது மகிழ்ந்தார்கள். பல தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகளை பிடிக்காதவர்கள் ஒதுங்கி இருந்தார்கள் ஒழிய துரோகியாக மாறவில்லை. காரணம் தமிழீழம் என்றதில் பலருக்கு தெளிவு இருந்தமையால். அப்படி நாம் எமது தேசம், எமது விடுதலை, என்பதில் தெளிவாக இருந்தால் நாம் ஒருமையாக இருக்க முடியும். கருத்து வேறுபாடு தவறு இல்லை தெளிவு முக்கியம். அதுவே ஒருமை.

தமிழர்கள் நிலம் சுதந்திரம் அடைந்தே ஆகும். தமிழர்களின் தேசம் மலர்வது உறுதியானது. அதை விரைவு படுத்துவது எமது கையிலையே தங்கி உள்ளது. உணர்வோம்.

Saurce: Kumarinadu.net