எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எங்கள் நிலைப்பாடு என்ன? விளக்குகிறது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! December 18, 2014 News ஜனாதிபதில் தேர்தல் தொடர்பான எங்களின் கருத்துகள் வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அக்கறையைச் சுட்டிக்காட்டியே இக்கருத்துக்களைக் கூறுகின்றோம். தமிழ் மக்களை குறிவைக்கும் மகிந்த ராஜபக்சவின் கொள்கை என்பது தமிழ் மக்கள் அழிவதற்குச் சமம் என்ற நிலையிலேயே மகிந்தவின் ஆட்சி பிரதிபலிப்தாக தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஒவ்வொரு தமிழனுக்கு நிலைப்பாடாக இருக்கிறது. எதிர்க்கட்சி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறீசேனாவின் கொள்கைகளை எடுத்துப்பார்த்தால் அவர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். 1. ஒற்றை ஆட்சிக்குள்ளே தான் தீர்வு. 2. சமஷ்டி ஆட்சியை வெளிப்படையாக நிராகாரித்திருக்கின்றார். 3. புத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுப்தாக உத்தியோகபூர்வமான அறிவித்திருக்கிறார். 4. எங்கள் இனத்தை மிக மோசமாக அழித்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இருக்கின்ற தலைவர்களையும், அந்த ஆட்சியில் உள்ள தலைவர்களின் கட்டளைப்படி இன அழிப்பைச் செய்த இராணுவ அதிகாரிகளையும், இராணுவத்தையும் எக்காரணம்கொண்டு ஒரு சர்வதேச விசாரணைக்கும் பொறுப்புக் கூறலுக்கும் இடமளிக்க மாட்டோம் என்பதை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். இதில் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் என்பவை எதிர்காலத்தில் கிடைக்கப் போவதில்லை என்பதை அவர் தெளிவாகக் கூறுகிறார். இங்கே போட்டியிடுகின்ற இரு வேட்பாளர்களுமே ஒரே கொள்கையை முன்னெடுப்பார்கள் என்றால் இங்கே ஆட்சி மாற்றம் என்பது இல்லை. மாறாக இங்கே ஒரு ஆள் மாற்றம் மட்டுமே முன்னெடுக்கப்படவுள்ளது. உண்மையில் இங்கே சிங்கள பெளத்த தேசிய வாதத்திற்குள் ஊறியிருக்கின்ற மக்களுக்கு இடையில் யார்? அதிகளவு செல்வாக்குச் செலுத்தலாம் என்பதே இத்தேர்தல் போட்டி. ரணில் விக்கரசிங்கவை சிங்கள மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்றால், ரணிலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்க அவர் எதிரானவர் அல்ல. அவர் ஒரு சிங்கள தேசியவாதி அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் செய்தவர். தமிழ் மக்களுக்கு ஏதோ ஒருவகையில் தீர்வு கொடுக்க வேண்டும் என்று நினைத்தவர். ஒட்டுமொத்தமாக ரணில் ஆட்சியில் சிங்கள் மக்களைத் தமிழ் மக்களிடம் விற்றவர் என்றே சிங்கள மக்கள் பார்க்கிறார்கள். சிங்கள மக்களின் நலன்கள் ரணிலின் ஆட்சியில் பேணப்படாது என்பதில் சிங்கள மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் எதிர்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சின் தலைவரான ரணில் வேட்பாளராக வர முடியவில்லை. ரணில் ராஜபக்சவை சர்வதே மட்டத்தில் நியாயப்படுத்தக் கொண்டிருந்தவர். இப்போது எதிர்க்கட்சி ஒரு புது உடுப்பு போட்டிருக்கிறது. அதில் கடும் சிங்கள தேசியத்தில் ஊறிப்போயுள்ள சந்திரிகா, ஜாதிக ஹெல உறுமய, ஜேவிபி போட் கட்சிகளை உள்வாங்கி இருக்கிறது. இப்போது ரணில் தலைமையிலான ஜக்கிய தேசியக் கட்சியின் தோற்றப்பாடு முற்றாக சிங்கள மக்கள் மத்தில் மாற்றப்பட்டு புதி அணிகளுடன் தான் செல்லவேண்டியுள்ளது ஆட்சி பெறுவதற்கு. நாளைக்கு அவர்கள் ஆட்சியை தக்க வைக்க வேண்டும். மகிந்த ராஜபக்ச நாளைக்குத் தோற்றாலும் அவர் சும்மா இருக்கப்போவதில்லை. புது ஆட்சிக்கு எதிராக அவர் கருத்துத் தெரிவித்துக்கொண்டே இருக்கப் போறார். இன்று தமிழ் மக்கள் ஓர் ஆட்சி மாற்றம் ஊடாக ஒரு மூச்சு இழுக்கின்ற இடைவெளி வரும் என்று நினைக்கிறார். எங்களின் அனுபவம் இது நடக்கப் போவதில்லை. இத் தேசிய வாசிகள் தங்களது ஆட்சியைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வதற்காக தொடந்து தமிழ் மக்களுக்கு எதிரான கொள்ளையை அவர்கள் முன்னெடுப்பார்கள். தயவு செய்து எமது மக்கள் இவற்றுள் சிக்குண்டு ஏமாற்றப்பட வேண்டாம். எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது அதனால் இவற்றை நாங்கள் கூறுகிறோம். எங்களுடைய கட்சியினுடைய தாழ்மையான வேண்டுகோள். ஒரு புத்திசாலித்தனமாக நடந்கொள்ள வேண்டும் என்றால் இத் தேர்தலில் நாங்கள் ஒதுங்கி நிற்பதுதான் சிறந்ததாக அமையும். ஒருபோதும் எதிர்காலத்தில தமிழ் மக்களின் வாக்குகளை தமிழ் மக்கள் அளிப்பதற்கான ஓர் ஆணையை நாங்களே கொடுத்ததாக அமையக்கூடாது. 1994ம் ஆண்டு தமிழ் மக்கள் அளித்த வாக்குகளைகொண்டே சமாதானத்திற்கான போர் என்று யுத்தத்தைத் நடத்தியவர்கள். அதே பழிவாங்களை எங்களுடைய மக்கள் சந்திக்கக்கூடாது என்பதற்காகவே இக்கருத்துக்களை நாங்கள் கூறுகின்றோம். அடுத்து தேர்தலுக்கு பின்னரான காலம் சீனா ஒருபக்கம், மேற்கும் இந்தியாவும் இன்னொரு பக்கம். இந்த இரண்டு தரப்பினருடைய நலன்களும் தங்களின் நலன்களுக்கானப் போட்டியிடுகின்றனர். இன்றைக்கு சீனாவுடன் மகிந்த ராஜபக்ச நிற்கிறார் என்பது வெளிப்படை. மேற்கும் இந்தியாவுடனும் அணுகிப்போகின்ற தரப்பு என்றால் பொதுஎதிரணி. எல்லாருக்கும் தெரியும் வல்லரசுகளைப் பொறுத்த வரையில் அவர்களின் நலண்கள் தான் முக்கியம். தமிழ் மக்களின் நியாயத்திற்கு ஏற்ப அவர்கள் முடிவெடுக்கப் போவதில்லை.