மகிந்தராஜபக்ஷ கூறுவதை போல பழைய விடயங்களை இலகுவாக மறக்க முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய மகிந்தர் இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தார்.

பழைய சம்பவங்களை மறந்து தமக்கு ஆதரவை வழங்குமாறும் அவர் கோரி இருந்தார்.

மகிந்த அரசாங்கம் மேற்கொண்ட இனவழிப்பை மறப்பதா? 65 வருடங்களாக இடம்பெறும் தமிழ் புறக்கணிப்பை மறப்பதா? விடுதலைப் போராட்டத்தை மறப்பதா? அல்லது யுத்தத்தின் பின்னரும் எந்த தீர்வுகளும் இன்றி அநாதரவாக இருக்கின்ற நிலையை மறப்பதா? என்று அரியநேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மகிந்த இவ்வாறான கருத்துக்களை கூறாமல், முடியுமாக இருந்தால் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கைதிகளை விடுவித்துக்காட்டட்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.