மைத்திரிபால கூறுகின்ற விசாரணை என்பது எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கை! ஆனந்தி சசிதரன் December 21, 2014 News மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எல்.எல்.ஆர்.சி. ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற உள்ளூர் பொறிமுறையிலான விசாரணைகள் என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை நாங்கள் நாடியிருக்கின்றோம். இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற உள்ளூர் சுதந்திர விசாரணை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணையொன்றை நடத்த முடியாது என்றும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், அதற்குப் பதிலாக உள்நாட்டில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்று தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.