நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அவசர அறிவித்தல்!!! December 24, 2014 News நாடு பூராகவும் பெய்து வரும் கனமழையையடுத்து வடக்கு கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் வவுனியா மன்னார் மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், தேவாலயங்கள், பொதுநோக்கு மண்டபங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்தநிலையில் மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், தலைமன்னார் மற்றும் நானாட்டான் பிரதேசங்களில் கடுமையாகப்பாதிக்கப்பட்டு ஏழு இடைத்தங்கல் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள மக்களிற்கு அத்தியாவசிய பொருள்கள் தேவைப்படுகின்றன. தலைமன்னார் புனித யாகப்பர் கோவிலில் 25 குடும்பங்களும் (65பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 08, 70 வயதுக்கு மேல்பட்டோர் 10), கட்டுக்காரன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் 25 குடும்பங்களும் (76பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 09), பூரண சுவிசே~சாலையில் 24 குடும்பங்களும் (94பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 04), பிரதேசசபை வாசிகசாலையில் 28 குடும்பங்களும் 25 குடும்பங்களும் (103பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 04), தலைமன்னார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 08 குடும்பங்களும் (30பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 02), அம்பாள்நகர் அறநெறிப்பாடசாலையில் 42 குடும்பங்களும் (164பேர் – ஒரு வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் 15), நானாட்டான் மகாவித்தியாலயத்தில் 403 குடும்பங்களும் (1500க்கும் மேல்பட்டோர்) தஞ்சமடைந்துள்ளன. விவசாய வயல் நிலங்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. கிராமங்களுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்போரின் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலசல கூடங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் நிரம்பி வழிவதால் தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயநிலைமையும் காணப்படுகின்றது. இம்மக்களிற்கு உதவி செய்ய விரும்புவர்கள் தயவு செய்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு 41369881norgetcc@gmail.com