வன்னிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து குளத்தின் நீர்மட்டம்  33 அடியாக உயர்ந்தது. இதனால் ஏற்கனவே திறக்கப்பட்ட 10 வான் கதவுகளும் மேலும் அகலமாகத் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிக நீர் வெளியேற்றம் காரணமாக கண்டாவளைப் பிரதேசத்தை சேர்ந்த 680 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குளத்தின் 10 வான்கதவுகளில் 8 வான் கதவுகள்  வன்னிப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து குளத்தின் நீர்மட்டம் முன்தினம் 4 அடி உயரத்துக்கும் 2 வான்கதவுகள் ஒன்றரை அடி உயரத்துக்கும் திறக்கப்பட்டுள்ளது.