இலங்கையில்  ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை தாண்டுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால்குமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டுக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.