கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பாக்கியராஜ் டாருகீசன், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹிருனி உதார ஆகியோர் முதல் இடத்தில் சித்தியெய்தியுள்ளனர்.

இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில் முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி மாணவியான தி.தயந்திகா 3ஏ சித்தி பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.

மாவட்ட நிலையில் கு.கதீஸ் (3ஏ) முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் (2ஏ,பி) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

அத்துடன் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராமமூர்த்தி ஜனத் (3ஏ) பெற்றுள்ளார்.

இதேவேளை, விஞ்ஞானப் பிரிவில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஏகாம்பரம் யுகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தினையும் பெற்றுள்ளார்.

மேலும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தறை சுஜாதா கல்லூரியின் ஹிருனி உதார ஆகியோர் தேசிய ரீதியில் முதல் இடத்தில் சித்தியெய்தியுள்ளனர்.

கலைப் பிரிவில் கொழும்பு விசாகாவின் ஷாவினி நெத்சலா பத்திரன, பொது பாடவிதானத்தில் மியூஸியஸ் வித்தியாலயத்தின் நிபுணி டயஸ் நாகவத்த, வர்த்தகப் பிரிவில் காலி தெற்கு மகளிர் வித்தியாலயத்தின் யு ஜி. பியூமி தனஞ்செ ஆகியோர் தேசிய ரீதியில் முதல் இடம்பெற்றுள்ளனர்.