ஈழத் தமிழரின் இலத்திரனியல் வணிக நிறுவனம் SEO Internet Solutions, சர்வதேச விருதிற்கு சிபாரிசு! December 29, 2014 News அமெரிக்கா. இல்லினோயிஸ் இருந்துவெளிவரும் Promotionworld எனும் நிறுவனம், சர்வதேச அளவில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களையும் அதன்சிறப்புதேர்ச்சி, வளர்ச்சி, நன்மதிப்பு தொழில்முறமை, மற்றும் வாடிக்கையாளர் திருப்தி, பயன்படுத்தும் நுட்பங்கலினை அடிப்படையாக வைத்து மிகசிறந்த இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்களினை தேர்வு செய்து அதற்கான அங்கீகாரவிருதினை கடந்த8 வருடங்களாக வழங்கிவருகின்றது. வவுனியா, வடபகுதியில் இயங்கிவரும் இலத்திரனியல் வணிகம் மற்றும் இலத்திரனியல் சந்தைப்படுத்தல் துறையில் சர்வதேச மற்றும் பல தேசிய விருதுகளினை பெற்ற Extreme SEO Internet Solutions தனியார் நிறுவனம், Promotionworld நிறுவனத்தினால் The Readers Choice 2014 –9th Digital Marketing Awards இற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான தகுதி எனும் அடிப்படையில் கடந்த எட்டு வருடங்களாக அமெரிக்க மற்றும் மேற்கத்தேய நாடுகளைசார்ந்த பல்தேசிய இலத்திரனியல் சந்தைபடுத்தல் நிறுவனங்கள் மாத்திரமே பெற்றுவருவது குறிபிடத்தக்கது. இவ்வாறானநிலையில் இலங்கையின் வடபகுதியில் இருந்து தொழிற்படும் ஒருநிறுவனம் சர்வதேச இலத்திரனியல் வணிகதிக்கான சிபாரிசினை பெறுவது என்பது மிகவும் கடினம் அத்துடன் இதுவே முதல் தடவை. தற்போது இந்நிறுவனம் Top 25 Nominees எனும் கட்டத்திற்குள் தரப்படுத்தபட்டுள்ளது அடுத்ததாக பொதுவாக்கெடுப்பின் மூலமே முதலாவது இரண்டாவது எனும் தரப்படுத்தல் அமையும். உலகளவில் வணிகரீதியில் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் இந்நிறுவனத்தின் தலைவர் சரண்யன் ஈழத்தில் பிறந்த ஓர் தமிழர் என்பது நாம் பெருமைப்படவேண்டிய விடையம். இவ்விருதினை, இந்நிறுவனம் பெறுமாயின் இது ஒட்டுமொத்த இலங்கை தமிழ் இலத்திரனியல் வணிகம், இலத்திரனியல் வர்த்தகம் சார்த்ததுறைக்கான ஒருமைல்கல்லாகவே அமையும். Saurce: The Promotionworld