மக்களை நான் பிழையான வழியில் வழி நடத்தவில்லை. மக்களிடம் நான் வாக்கு கேட்கும் போது தாயகம், தேசியம், சுயநிர்ணயம் மற்றும் காணமல் போனோர் தொடர்பில் மாகாணட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட்டம் ஆகியவற்றில் கதைப்பதற்கு அங்கீகாரம் தருமாறு கேட்டிருந்தேன். இதேநேரம் நான் இன்னாருக்கு வாக்கைப் போடுமாறு கேட்பதே பிழை. நாங்கள் விலைபோகிறவர்கள் அல்ல. நான் என்னுடைய இன விடுதலைக்காக உயிரைக் கொடுப்பேனே ஒழிய ஒரு துரோகியாக உயிர் விடுகிற நிலையிலும் நான் இல்லை எனக் கூறியுள்ளார் அனந்தி சசிதரன்.