ஒரு நாட்டின் தேர்தலை எதிர் கொள்ளும் மக்கள் அந்த தேர்தலில் எவ்வாறு தமது வாக்கினை பயன்படுத்துவது என்பதனை தீர்மானிக்க சில விடயங்களை கருத்தில் கொள்வார்கள்.
அவையாவன நடைபெறுகின்ற ஆட்சியில் தமக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா? உண்டெனின் என்ன பிரச்சினை? புதிதாக ஆட்சிக்கு வர விரும்புபவர் தனது ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருமுகமாக ஏதேனும் திட்டங்களை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றாரா? பிரச்சார மேடைகளில் தனது பிரச்சினைகளிற்கு ஏதேனும் தீர்வைத் தரும்படியான திட்டங்களைப் பற்றிப் பேசுகின்றாரா? அத்தகைய திட்டங்களை உண்மையில் வைத்திருக்கின்றாரா?

இத்தகைய ஆராட்சியின் பின் ஓர் சாதாரண குடிமகன் ஓர் முடிவுக்கு வருவான். ஒன்று நடைபெறும் ஆட்சி தனக்கு நல்லாட்சியாகப் பட்டால் அந்த ஆட்சி நிலை பெற வாக்களிப்பான். அல்லது கெட்ட ஆட்சி எனின் தனது பிரச்சினைகளிற்கு தீர்வைத் தருவேன் என கூறுபவனிற்கு வாக்களிப்பான். அல்லது பிரதான வேட்பாளர்கள் எவரும் தனது பிரச்சினைகளிற்கு தீர்வைத் தரகூடிய திட்டங்கள் பற்றி எதுவும் கூறவில்லை என ஒருவர் கருதின் தன்னியல்பாக யாருக்கும் வாக்களித்து பிரயோசனமில்லை எனக்கருதி தனது வேலையைப் பார்ப்பான். இராமன் வந்தாலும் இராவணன் வந்தாலும் என்னுடைய வாழ்வில் மாற்றமில்லை எனக் கருதி வாக்களிக்கச் செல்லாமல் இருப்பவர்கள் உலகம் முழுவதும் ஏனோ இருக்கத்தான் செய்கின்றார்கள். அதனால் தான் உலகின் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு தேர்தலிலும் 100% வாக்களிப்பு இடம்பெற்றது கிடையாது.

இந்த அடிப்படையில் இன்று இலங்கைதீவில் தேர்தலை எதிர் கொள்ளும் தமிழ் மக்களிற்கு என்ன பிரச்சினைகள் உள்ளன என்பது பற்றி பார்க்க வேண்டும். ஒன்று காலாகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினை. இந்த இனப்பிரச்சினையுடன் பின்னிப்பிணைந்த சட்ட ஆட்சி இன்மை, ஜனனாயக மறுப்பு, நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல், அரசியற் கைதுகள், காணாமற் போதல் இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்தமை….இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு இவற்றிற்கு பொறுப்பு என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. இவற்றினை இல்லை என்று கூறுபவர்கள் இந்த அரசிற்கு காவடி எடுப்பவர்களாக தான் இருக்க முடியும் ஆகவே மானமுள்ள தமிழர் எவரும் இந்த அரசிற்கு வாக்களிக்க முடியாது.

அவ்வாறாக இருந்தால் மற்ற பிரதான வேட்பாளரைப் பற்றியும் அவருடன் இருப்பவர்களினைப் பற்றியும் அவர் என்ன சொல்கின்றார் என்பதைப்பற்றியும் நாம் ஆராய வேண்டும். மிகச்சாதாரண புத்தியுள்ளவரும் கூட (very ordinary prudent man) கூறமாட்டார்கள் எந்தவித ஆராட்சியுமின்றி கண்மூடித்தனமாக வாக்களிக்க வேண்டும் என.

மைத்திரியைப் பொறுத்த வரை மகிந்த முதன் முதலாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் மாதம் வரை மகிந்த தமிழ் மக்களிற்கு செய்த அத்தனை கொடுமைகளையும் செய்யும் போது அவரது உற்ற நண்பனாக அவரது கட்சியின் செயலாளராக அவரது அமைச்சரவையின் மிக முக்கிய அமைச்சராக இருந்து எவ்வித மாற்றுக் கருத்துமின்றி செயற்பட்டதுடன் மகிந்தவை இந்த ஜனாதிபதித் தேர்தலிற்கு சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகச் முன்மொழிந்த ஓர் இனப்படுகொலை அரசின் முக்கிய பங்காளி. இன்று மைத்திரியுடன் இருக்கும் சந்திரிக்கா 1994-2005ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்து சமாதானத்திற்கான போரை நடாத்தி தமிழ் மக்களிற்கு சொல்லொணா துயரங்களினை கொடுத்தவர். இவரது ஆட்சியில் தமிழ் மக்கள் பட்ட கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மைத்திரியுடன் இருக்கும் மற்றொருவரான சரத் பொன்சேகா மகிந்த அரசின் நம்பிக்கைக்குரிய இராணுவத் தளபதியாக இருந்து இன அழிப்புப் போரை ஈவிரக்கமின்றி முன்னின்று நடாத்தியவர். கெல உறுமய, ஜே.வி.பி போன்றோரின் இனவாதம் பற்றி யாரும் கூறி தெரிய வேண்டியதில்லை.

இப்பேற்பட்டவர்களை சூழ வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மேடைகளிலும் என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம். இனப்பிரச்சினைக்கு 13ம் திருத்தத்திற்கு அப்பால் செல்ல மாட்டேன், உயர் பாதுகாப்பு வலயங்களை இஞ்சியும் பின்னகர்த்த மாட்டேன், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மாட்டேன், போர்க்குற்றங்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளிற்கும் இடமளியேன். சம்பிக்க ரணவக்க ஒருபடி மேலே போய் கூறுகின்றார் தனக்கும் மைத்திரிபாலவிற்கும் இடையில் ஓர் உடன்படிக்கை உண்டு அந்த உடன்படிக்கைப் பிரகாரம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடப்பட்ட முன்னாள் போராளிகளை மீளவும் பிடித்து தண்டனை கொடுப்படும்.

இவற்றை உற்று நோக்கும் ஒருவருக்கு ஒரு விடயம் நன்றாகப் புரியும் அதாவது எமக்கு இனப்பிரச்சினைக்குத் தான் தீர்வு தராட்டியும் பரவாயில்லை எமக்கு ஜனனாயகமுமில்லை, சட்ட ஆட்சியுமில்லை பறிபோன நிலங்களும் இல்லை, மாறாக புனர்வாழ்வு என்ற போர்வையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் எனக்கருதப்படுவோர் மாறாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை என்ற நிலை.

65 ஆண்டுகால அரசியல் அனுபவம் எமது மக்களுக்கு நிறையவே உண்டு ஒவ்வொரு தேர்தலிலும் காலாகாலமாக தமிழ் மக்கள் மாற்றத்திற்கே வாக்களித்து வாக்களித்து கையை மட்டுமே தேய்ட்துக் கொண்டோம். எனினும் இந்த 65 ஆண்டுகால வரலாற்றில் ஆட்சியை மாற்றுவதற்கான வேட்பாளருடன் தமிழ் மக்களின் தலைமைகள் ஆகக் குறைந்த அளவிற்கேனும் நன்மை ஏற்படுத்தக்கூடிய சில ஒப்பந்தங்களை செய்தார்கள் (உ-ம் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், பிரபா-ரணில் ஒப்பந்தம்) காலப் போக்கில் இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட போது நாம் கூறினோம் நம்பி ஏமாந்தோம் என. ஆட்சியை மாற்றுவோம் என வந்த வேட்பாளார்கள் எல்லோரும் தமிழ் மக்களிற்கு நியாயமான தீர்வைத் தருவேன் எனக் கூறியே வந்தார்கள். சந்திரிக்கா அரியணை ஏறும் போது சமஸ்டித் தீர்வு தருவேன் எனக் கூறியே வந்தார். ஆனாலும் அவரால் வழங்க முடியவில்லை காரணம் அபோதய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா (தற்போது மைத்திரியின் உற்ற நண்பன்) சந்திரிக்காவின் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட தீர்வுத்திட்டத்தினை தமிழ் மக்களிற்கு தனி நாடு கொடுக்கப்போகின்றார் எனக் கூறி பாராளுமன்றில் தீயிட்டார். அப்போது கூட எம்மால் கூற முடிந்தது

ஒரு நாட்டின் தேர்தலை எதிர் கொள்ளும் மக்கள் அந்த தேர்தலில் எவ்வாறு தமது வாக்கினை பயன்படுத்துவது என்பதனை தீர்மானிக்க சில விடயங்களை கருத்தில் கொள்வார்கள். அவையாவன நடைபெறுகின்ற ஆட்சியில் தமக்கு ஏதேனும் பிரச்சினை உண்டா? உண்டெனின் என்ன பிரச்சினை? புதிதாக ஆட்சிக்கு வர விரும்புபவர் தனது ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தருமுகமாக ஏதேனும் திட்டங்களை தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றாரா? பிரச்சார மேடைகளில் தனது பிரச்சினைகளிற்கு ஏதேனும் தீர்வைத் தரும்படியான திட்டங்களைப் பற்றிப் பேசுகின்றாரா? அத்தகைய திட்டங்களை உண்மையில் வைத்திருக்கின்றாரா?

இத்தகைய ஆராட்சியின் பின் ஓர் சாதாரண குடிமகன் ஓர் முடிவுக்கு வருவான். ஒன்று நடைபெறும் ஆட்சி தனக்கு நல்லாட்சியாகப் பட்டால் அந்த ஆட்சி நிலை பெற வாக்களிப்பான். அல்லது கெட்ட ஆட்சி எனின் தனது பிரச்சினைகளிற்கு தீர்வைத் தருவேன் என கூறுபவனிற்கு வாக்களிப்பான். அல்லது பிரதான வேட்பாளர்கள் எவரும் தனது பிரச்சினைகளிற்கு தீர்வைத் தரகூடிய திட்டங்கள் பற்றி எதுவும் கூறவில்லை என ஒருவர் கருதின் தன்னியல்பாக யாருக்கும் வாக்களித்து பிரயோசனமில்லை எனக்கருதி தனது வேலையைப் பார்ப்பான். இராமன் வந்தாலும் இராவணன் வந்தாலும் என்னுடைய வாழ்வில் மாற்றமில்லை எனக் கருதி வாக்களிக்கச் செல்லாமல் இருப்பவர்கள் உலகம் முழுவதும் ஏனோ இருக்கத்தான் செய்கின்றார்கள். அதனால் தான் உலகின் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு தேர்தலிலும் 100% வாக்களிப்பு இடம்பெற்றது கிடையாது.

இந்த அடிப்படையில் இன்று இலங்கைதீவில் தேர்தலை எதிர் கொள்ளும் தமிழ் மக்களிற்கு என்ன பிரச்சினைகள் உள்ளன என்பது பற்றி பார்க்க வேண்டும். ஒன்று காலாகாலமாக இருந்து வரும் இனப்பிரச்சினை. இந்த இனப்பிரச்சினையுடன் பின்னிப்பிணைந்த சட்ட ஆட்சி இன்மை, ஜனனாயக மறுப்பு, நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல், அரசியற் கைதுகள், காணாமற் போதல் இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது மக்களை கொத்துக் கொத்தாக கொன்றொழித்தமை….இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். தற்போது ஆட்சியில் இருக்கும் அரசு இவற்றிற்கு பொறுப்பு என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்க முடியாது. இவற்றினை இல்லை என்று கூறுபவர்கள் இந்த அரசிற்கு காவடி எடுப்பவர்களாக தான் இருக்க முடியும் ஆகவே மானமுள்ள தமிழர் எவரும் இந்த அரசிற்கு வாக்களிக்க முடியாது.

அவ்வாறாக இருந்தால் மற்ற பிரதான வேட்பாளரைப் பற்றியும் அவருடன் இருப்பவர்களினைப் பற்றியும் அவர் என்ன சொல்கின்றார் என்பதைப்பற்றியும் நாம் ஆராய வேண்டும். மிகச்சாதாரண புத்தியுள்ளவரும் கூட (very ordinary prudent man) கூறமாட்டார்கள் எந்தவித ஆராட்சியுமின்றி கண்மூடித்தனமாக வாக்களிக்க வேண்டும் என.

மைத்திரியைப் பொறுத்த வரை மகிந்த முதன் முதலாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற நாளில் இருந்து கடந்த 2014 டிசம்பர் மாதம் வரை மகிந்த தமிழ் மக்களிற்கு செய்த அத்தனை கொடுமைகளையும் செய்யும் போது அவரது உற்ற நண்பனாக அவரது கட்சியின் செயலாளராக அவரது அமைச்சரவையின் மிக முக்கிய அமைச்சராக இருந்து எவ்வித மாற்றுக் கருத்துமின்றி செயற்பட்டதுடன் மகிந்தவை இந்த ஜனாதிபதித் தேர்தலிற்கு சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராகச் முன்மொழிந்த ஓர் இனப்படுகொலை அரசின் முக்கிய பங்காளி. இன்று மைத்திரியுடன் இருக்கும் சந்திரிக்கா 1994-2005ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்து சமாதானத்திற்கான போரை நடாத்தி தமிழ் மக்களிற்கு சொல்லொணா துயரங்களினை கொடுத்தவர். இவரது ஆட்சியில் தமிழ் மக்கள் பட்ட கொடுமைகளை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மைத்திரியுடன் இருக்கும் மற்றொருவரான சரத் பொன்சேகா மகிந்த அரசின் நம்பிக்கைக்குரிய இராணுவத் தளபதியாக இருந்து இன அழிப்புப் போரை ஈவிரக்கமின்றி முன்னின்று நடாத்தியவர். கெல உறுமய, ஜே.வி.பி போன்றோரின் இனவாதம் பற்றி யாரும் கூறி தெரிய வேண்டியதில்லை.

இப்பேற்பட்டவர்களை சூழ வைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொள்ளும் மைத்திரி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் மேடைகளிலும் என்ன கூறுகின்றார் என்பதைப் பார்ப்போம். இனப்பிரச்சினைக்கு 13ம் திருத்தத்திற்கு அப்பால் செல்ல மாட்டேன், உயர் பாதுகாப்பு வலயங்களை இஞ்சியும் பின்னகர்த்த மாட்டேன், அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மாட்டேன், போர்க்குற்றங்கள் தொடர்பில் எவ்வித விசாரணைகளிற்கும் இடமளியேன். சம்பிக்க ரணவக்க ஒருபடி மேலே போய் கூறுகின்றார் தனக்கும் மைத்திரிபாலவிற்கும் இடையில் ஓர் உடன்படிக்கை உண்டு அந்த உடன்படிக்கைப் பிரகாரம் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடப்பட்ட முன்னாள் போராளிகளை மீளவும் பிடித்து தண்டனை கொடுப்படும்.

இவற்றை உற்று நோக்கும் ஒருவருக்கு ஒரு விடயம் நன்றாகப் புரியும் அதாவது எமக்கு இனப்பிரச்சினைக்குத் தான் தீர்வு தராட்டியும் பரவாயில்லை எமக்கு ஜனனாயகமுமில்லை, சட்ட ஆட்சியுமில்லை பறிபோன நிலங்களும் இல்லை, மாறாக புனர்வாழ்வு என்ற போர்வையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகள் எனக்கருதப்படுவோர் மாறாக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களையும் மறுப்பதற்கில்லை என்ற நிலை.

65 ஆண்டுகால அரசியல் அனுபவம் எமது மக்களுக்கு நிறையவே உண்டு ஒவ்வொரு தேர்தலிலும் காலாகாலமாக தமிழ் மக்கள் மாற்றத்திற்கே வாக்களித்து வாக்களித்து கையை மட்டுமே தேய்ட்துக் கொண்டோம். எனினும் இந்த 65 ஆண்டுகால வரலாற்றில் ஆட்சியை மாற்றுவதற்கான வேட்பாளருடன் தமிழ் மக்களின் தலைமைகள் ஆகக் குறைந்த அளவிற்கேனும் நன்மை ஏற்படுத்தக்கூடிய சில ஒப்பந்தங்களை செய்தார்கள் (உ-ம் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், பிரபா-ரணில் ஒப்பந்தம்) காலப் போக்கில் இந்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட போது நாம் கூறினோம் நம்பி ஏமாந்தோம் என. ஆட்சியை மாற்றுவோம் என வந்த வேட்பாளார்கள் எல்லோரும் தமிழ் மக்களிற்கு நியாயமான தீர்வைத் தருவேன் எனக் கூறியே வந்தார்கள். சந்திரிக்கா அரியணை ஏறும் போது சமஸ்டித் தீர்வு தருவேன் எனக் கூறியே வந்தார். ஆனாலும் அவரால் வழங்க முடியவில்லை காரணம் அபோதய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா (தற்போது மைத்திரியின் உற்ற நண்பன்) சந்திரிக்காவின் மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட தீர்வுத்திட்டத்தினை தமிழ் மக்களிற்கு தனி நாடு கொடுக்கப்போகின்றார் எனக் கூறி பாராளுமன்றில் தீயிட்டார். அப்போது கூட எம்மால் கூற முடிந்தது நம்பி ஏமாந்து விட்டோம் என்று.

இனவாதிகள் புடை சூழ இருந்து தமிழ் மக்களிற்கு எவற்றையும் தர மாட்டேன் என வெளிப்ப்டையாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிக்கொண்டிருக்கும் மைத்திரி ஆட்சிக்கு வந்த பின் எல்லாவற்றையும் தருவார் என்ற நப்பாசையில் அவருக்கு வாக்குப் போடும் நாம் நாளை அவர் எதையும் செய்யாது விடும் போது நம்பி ஏமாந்து விட்டோம் என்று கூறும் தார்மீக உரிமையையும் இழந்தவர்களாக நாம் இருப்போம். எம்மால் அவரை நோக்கி விரல் நீட்ட முடியாது காரணம் நாம் அவர் கூறிய எல்லாவற்றினையும் ஏற்று அங்கீகரித்தே தேர்தலில் வாக்களிக்கின்றோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

இந்தப் புற நிலையில் எவ்வாறு தமிழ் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்க முடியும்?? என்ற வினா சாதாரண குடிமகனாக எனக்கு எழுகின்றது. எனவே நான் மூன்றாவது முடிவிற்கு வருகின்றேன் அதாவது ராமன் ஆண்டா என்ன இராவணன் ஆண்டா என்ன என்பதாகும். இந்த முடிவின் மூலம் என்னால் செய்யக்கூடிய ஆகக் குறைந்த உதவி எதுவாக இருக்குமென்றால் நான் இந்த ஒற்றயாட்சியை வலியுறுத்தும், பொறுப்புக்கூறலை மறுதலிக்கும், எமது வாழ்விடங்களை விட மறுக்கும், தேர்தல் விஞ்ஞபனங்களை கொண்ட நபர்களிற்கு நான் அங்கீகாரம் கொடுக்கவில்லை என்பதாகும், அதனால் அவ்வாட்சியாளர்கள் என்னைப்பார்த்து கேட்க முடியாது நீ தந்த ஆணையை நிறைவேற்றுகின்றேன் என.

தமிழ்த் தேசியத்தினை வலியுறுத்தும் கட்சி என்ற ரீதியில் எவரும் எந்த ஒரு வேட்பாளைரையும் பகீரங்கமாக ஆதரிக்கக்கூடாது ஆதரிக்கவும் முடியாது. காரணம் தமிழ் மக்களின் மிகப்பிரதானமான பிரச்சினையாகக் கருதப்படுவது இனப்பிரச்சினை. இந்த இனப்பிரச்சினை தொடர்பில் விரும்பியோ விரும்பாமலோ நாம் நாளை அமையப்போகும் ஆட்சியாளருடன் பேசியே ஆக வேண்டும். நாம் விரும்பி ஆதரித்த வேட்பாளர் நாளை தேர்தலில் தோற்று நாம் எதிர்த்த வேட்பாளர் தேர்தலில் வெண்றால் நாம் எந்த முகத்துடன் அவருடன் பேசமுடியும் என்ற நியாயமான வினா எம்முன் எழும். கடந்த தேர்தலில் கூட்டமைப்பு பகீரங்கமாக பொன்சேகாவை ஆதரித்ததன் விழைவை நாம் கற்றறிந்து கொண்டு விட்டோம்.

ஆகக் குறைந்தது எமக்கு எவற்றையும் தர மாட்டேன் என கூறிக்கொண்டிருப்பவருக்கு நாம் வாக்களிக் மாட்டோம் என்ற செய்தியை ஆவது சொல்வோம்.

வரலாறு வழிகாட்டியாக நிற்கட்டும்…

-மணிவண்ணன்-