பிரான்ஸ் பாரிசிலிருந்து வெளிவரும் ”சார்லி ஹெப்டே” என்ற நகைச்சுவை இதழ் வெளிவரும் அலுவலகம் மீது நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.இன்று காலை பாரிசில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தினுள் உட்புகுந்த மூகமூடி அணிந்த ஆயுததாரிகள் அங்கிருந்த பணியாளர்களை கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளியுள்ளனர். இத்தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலில் 50 மேற்பட்ட துப்பாக்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில் இரு காவல்துறை அதிகாரிகள் உள்ளடங்குகின்றனர். தாக்குதலாளிகள் இறைதூதரை நினைத்துவிட்டு பழிதீர்த்துவிட்டோம் என்று உரக்கக்கூறியுள்ளார்கள் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலோந்து குறித்த சஞ்சிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது ஒர காண்டுமிராண்டித்தனமான கோளைத் தனமான தாக்குதல் என அவர் வர்ணித்துள்ளார். இதேநேரம் வேறு பல பயங்கரவாதத் தாக்குதல்கள் அண்மைய வாரங்களில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து பாரிஸ் முழுவதும் தீவிர கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டுள்ளததுடன் தாக்குதலாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையிலும் பிரான்ஸ் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சர்ச்சையும் சார்லி ஹெப்டோவும் தாக்குதலுக்குள்ளான பிரஞ்சு சஞ்சிகையான, சார்லி ஹெப்டொ ஒரு வார இதழ். இது டென்மார்க் பத்திரிகையொன்றில் முதலில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய இறைதூதர் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை 2006ம் ஆண்டில் மறு பிரசுரம் செய்து சர்ச்சைக்குள்ளானது.

கடந்த 2011ம் ஆண்டில், ஷாரியா ஹெப்டோ என்ற தலைப்பின் கீழ், இறைதூதர் முகமது நபியின் கேலி சித்திரம் ஒன்றை பிரசுரித்த பின்னர், இந்த சஞ்சிகையின் அலுவலகங்கள் தீக்குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாயின.
பல நாடுகளில் ” இன்னசன்ஸ் ஒப் முஸ்லீம்ஸ்” என்ற படம் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழலில், இந்த சஞ்சிகை முகமது நபியை நிர்வாணமாகக் காட்டும் படங்களை பிரசுரித்தது.

பிரான்சின் இனவெறிக்கெதிரான சட்டங்களின் கீழ் இதற்கெதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையிலும், சார்லி ஹெப்டோ சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் பலவற்றை தொடர்ந்தும் பிரசுரித்து வந்தது.

அதன் ஆசிரியர் போலிஸ் பாதுகாப்பில் வசிக்கிறார் என்பதும் நினைவூட்டத்தக்கது.