சிறிலங்காவில் மீண்டும் உள்நாட்டு விசாரணைகள் நடத்தப்படுமானால் அது காலத்தை கடத்தும் செயலாகவே அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பிலும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை ஒன்று நடைபெற்றுவருகிறது.

இந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த விசாரணை அறிக்கையில் சொல்லப்படும் விடயங்களை அமுலாக்கவும், அவ்வாறான குற்றச்செயல்கள் இனி இடம்பெறுவதை தடுக்கவும் புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனை விடுத்து புதிதாக விசாரணை நடத்துவது என்பது காலத்தை கடத்தும் செயலமாக அமையும் என்று, இதனைத் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.