சிறீலங்கா சிங்கள தேசத்தின் சுதந்திர நாள் நெருங்கி வருகிறது இதை  மையப்படுத்திய கொண்டாட்டங்களுக்கும் சிங்கள தேசம் தயாராகி வருகிறது. கொண்டாட்டங்களில் தாயக மக்கள் கடந்த காலங்களிலும் பெரிதாக கலந்து கொள்வதில்லை. அதேபோன்று புலம்பெயர்ந்த தமிழர்களும் புறக்கணித்தே வந்துள்ளனர்.
சில தமிழர்கள் பின்புறமாக களவாக சென்று வருவார்கள் இது குறித்த ஒரு தெளிவு தமிழர்களிடம் முழுமையாக இருந்தது எனலாம். சிங்கள தேசத்திற்கு கிடைத்த சுதந்திரம் 67 ஆண்டுகள் ஆகியும் தமிழர் தேசத்திற்கு கிடைக்கவேயில்லை.
அதனால் பெப்பிரவரி 4ஐ தமிழர்கள் இன்றும் கரிநாளாகவே கொண்டாடி வருகின்றனர். இங்கு தான் இவ்வருடம் குழப்பம் வந்துள்ளது. சமீபத்தில் இலங்கைத் தீவில் ஒரு சனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் கொடுங்கோலன் ராஐபக்ச தோற்கடிக்கப்பட்டார். இதனால் தமிழர் பிரச்சனை தீர்ந்துவிட்டது போலவும், தமிழர்கள் அனைத்து சுதந்திரங்களையும் பெற்று விட்டது போலவும் பிரேமை ஏற்படுத்தப்படுகின்றது.
வாருங்கள் ஒன்றாகக் கூடிக் கொண்டாடுவோம் என அழைப்பு புலத்தில்    தமிழருக்கு விடுக்கப்படுகின்றது. தமிழ் நடன ஆசிரியர்கள் பட்டியல் திரட்டப்பட்டு நடன அழைப்பு விடுக்கப்படுகின்றது. தமிழ் பெரியவர்கள் என அடையாளம் காணப்படுபவர்களுக்கு அன்பு அழைப்பு விடுக்கப்படுகின்றது. அங்கு வைத்து அவ்வவ் நாட்டு அரசியல் தலைமைகளுக்கு பார்த்தீர்களா தமிழர்களும் நாங்களும் ஒன்றர்கி விட்டோம் அனைத்துப் பிரச்சனையும்  தீர்ந்து விட்டது எனக்காட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இன்றைய அரசியல் சூழல் குறித்து தமிழர்களிடையே நிலவும் குழப்ப நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்த சிங்களம் முயல்கின்றது. இதற்கு சில தமிழர்களும் சில தமிழர் அமைப்புக்களும் துணைபோவது கவலையளிக்கிறது என்கின்றனர் மக்கள் இதனை ஒரு தெளிவான பார்வையுடன் சிங்களத்தின் சதிவலைக்கு பலியாகாமல் பயணிப்போமா? என் கேள்வி எழுப்புகின்றனர் அவர்கள்