சிறிலங்காவின் சுதந்திர நாளை கண்டித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் January 31, 2015 News சிறீலங்காவிற்கு 67 ஆவது ஆண்டு சுதந்திர நாள். தமிழர்களுக்கு 67 ஆண்டுகால அடக்குமுறை வாழ்வின் குறியீட்டு நாளாகும். நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக வருகிற புதன் கிழமை(04.02.2015) ஆறு மணி தொடக்கம் ஏழு மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவிருக்கின்றது. சிறீலங்காவின் 67 வது சுதந்திர தினத்தை புறக்கணிப்போம் தமிழினத்தின் மீது மேற்கொண்ட இன அழிப்பு போர்க்குற்றங்கள்;, தொடரும் சித்திரவதைகள் என்பவற்றிற்கு எதிராகவும் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தக் கூறுவோம். அனைவரும் ஒன்றிணைந்து நீதி கேட்டு போராடுவோம் வாருங்கள் ! ஒழுங்கமைப்பு: நோர்வே ஈழத்தமிழர் அவை