சிறீலங்காவின் சனதிபதியாக மகிந்த இருந்தகாலத்தில் இந்தியாவும் மேற்குநாடுகளும்
தமிழ்மக்களின் பலமாகவும் ஏகபிரதிநிதிகளாகவும் இருந்த விடுதலைப்புலிகளை அழிப்பதர்க்கு எல்லாவழிகளிலும்சிறீலங்காவுக்கு துணைநின்றார்கள் அதர்க்கானகாரணம் சிறீலங்காவின் பூகோள அரசியலில் தங்களின் சுயஅரசியலை தக்கவைத்துக்கொள்வதர்க்காகவே இருந்தது என்பது மறுக்கப்படாத உண்மை

ஆனால் மகிந்த அரசு இந்தியாவையும் மேற்குநாடுகளையும் ஒரம் கட்டிவிட்டு சீனாவோடு சீதனக்கல்யாணம் முடித்துக்கொண்டதால் கடுப்பாகிய இவர்கள் தமிழர் அரசியலை மகிந்தாவுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியதோடு மகிந்தாவின் ஆட்சியை அகற்றி தமக்கு ஆதரவான தலைமையை உருவாக்கி இன்று வெற்றியும் கண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ்மக்களின் அரசியல் இந்தியாவினதும் மேற்குநாடுகளினதும் சுயஅரசியலுக்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு தமிழ்த்தலைவர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

ஆகவே 2009 இல் அழிக்கப்படாத தமிழ் அரசியல்2015 இல் அழிந்துவிடமால் பாதுகாக்க புலம்பெயர்ந்த நாம் என்ன செய்யவேண்டும் என்பதே இன்றய சவால் இதை உணர்த்தும் முகமாகவே தாயகமும் சமகால அரசியலும் என்ற கருத்துக்களம் அமைந்துள்ளது.