04.02. கரிநாளில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவா நோக்கிய மக்கள் போரரட்டம் ‘விடுதலைச் சுடர்’ ஆரம்பிக்கப்படவுள்ளது. 04 மாசி 2015 அன்று மாலை 04:00 மணிக்கு பிரித்தானியாவில் Downing Street முன்பாக ஆரம்பிக்கும் விடுதலைச் சுடர் பயணம் ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயயுரிமையை பிரதிபலித்து பிரான்ஸ், பெல்யியம், நெதர்லாந்து, யேர்மனி போன்ற நாடுகளினூடாக பல நாட்கள் பயணித்து 16.03.2015 அன்று ஜெனிவா ஐ,நா முன்றலை சென்றடையவுள்ளது.

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நடைபெறும் இவ் விடுதலைச் சுடர் பயணத்தில் தமிழர்களாகிய நாம் 16.03.2015 ஜெனிவா ஐ,நா முன்றல் மாபெரும் மக்கள் அலையாக தோற்றம் அளித்தால் மட்டுமே எமது உரிமையை வென்றெடுக்க முடியும். ஆகையால் அனைத்து தமிழ் உறவுகளையும் 16.03.2015 அன்று ஜெனிவா ஐ,நா முன்றலில் அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.