முல்லைத்தீவு மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு February 9, 2015 News 2014 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டிகளில் மாகாண மட்டத்தில் வெற்றி வாகை சூடி அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு 07/02/2015 அன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. இவ்விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் கடந்த ஆண்டுக்கான தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், ஒரு லட்சம் ரூபாவினை ஒதுக்கியிருந்தார். கரைத்துறைப்பற்று பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் க.மாதவ ஜெய பரதாஸ் ,அந்தோனிப்பிள்ளை மாஸ்டர் மற்றும் பல சாதனையாளர்கள் கலந்து கொண்டனர். அகில இலங்கை ரீதியிலான போட்டிகளில் முன்னிலை பெற்றவர்கள் கா.நாகேந்திரன் – கராத்தே 3ஆம் இடம் ,குத்துச்சண்டை 3ஆம் இடம் டிலக்சனா – பாடசாலை மட்ட குத்துச் சண்டை 2 ஆம் இடம் கனிஸ்ணவாணி – பாடசாலை மட்ட குத்துச் சண்டைப் போட்டி-2 ஆம் இடம் R .கெவின் – பாடசாலை மட்ட குத்துச் சண்டை -2 ஆம் இடம் S . சுதாகர் – பாடசாலை மட்ட குத்துச் சண்டைப்போட்டி-3 ஆம் இடம் பினேகாஸ் – பாடசாலை மட்ட குத்துச் சண்டைப் போட்டி- 2 ஆம் இடம் மாகாணமட்ட போட்டிகளில் முன்னிலை பெற்ற வீரர்கள் கா.நாகேந்திரன் – கராத்தே 1ஆம் இடம் ,குத்துச் சண்டை 1ஆம் இடம், மல்யுத்தம்-1 ஆம் இடம் சி.சிறிஜனனன்- குத்துச் சண்டை 1 ஆம் இடம் ,தைக்வொண்டு -1ஆம் இடம் ,நீச்சல் போட்டி- 1ஆம் இடம் J .ஆதவன் – தைக்வொண்டு 2ஆம் இடம் A .ரொக்சன் – தைக்வொண்டு 1 ஆம் இடம் J .கனிஸ்டன் – தைக்வொண்டோ 2ஆம் இடம் S .றொபின் – மல்யுத்தம் 1ஆம் இடம் S .ரொக்சன் – மல்யுத்தம் 1 ஆம் இடம் S .ஜோன் சுதர்சன் – குத்துச் சண்டை 1 ஆம் இடம் R .ராசேந்திர குமார் – மல்யுத்தம் 1 ஆம் இடம் T .அனோஜன் – குத்துச் சண்டை 1 ஆம் இடம் A .லெறின்லால் – குத்துச் சண்டை -1ஆம் இடம் S .நந்தினி கராத்தே – 1 ஆம் இடம் S .சிவனேஸ்வரி கராத்தே -2 ஆம் இடம் ம.ராதிகா தைக்வொண்டு -1ஆம் இடம் ,கராத்தே 2ஆம் இடம் கார்த்திகா – குண்டு எறிதல் -1ஆம் இடம் ,தட்டு எறிதல் 1ஆம் இடம் S .விதுஸ்டன் -400 m ஓட்டம் 2ஆம் இடம்,800 m ஓட்டம் 2ஆம் இடம் S .குமார் -தைக்வொண்டோ 1ஆம் இடம் K .சாமந்தி -கிரிக்கெட் -1 ஆம் இடம் டிலக்சன்- நீச்சல் -1 ஆம் இடம் நிகழ்வில் சாதனையாளர்களுக்கான பரிசுப்பொருட்களை வழங்கி வைத்து உரையாற்றிய வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ,விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க தொடர்ந்தும் தன்னாலான முயற்சிகளை எடுப்பேன் என்று தெரிவித்தார்.