ஒரு தேசத்தின் சுதந்திரவிடுதலைக்காகப்போராடியவர்களும் அந்த சுதந்திரத்தினை எதிர்பார்த்துக்காத்திருந்த எத்தனையோ அப்பாவிகளும் செம்மெழியான தமிழ்மொழியினை அடையாளமாகக்கொண்டு தமிழனாகப்பிறந்தான் என்ற ஒரே ஒரு காரணத்தை தவிர வேறு எந்த பாவமும் செய்யாத எத்தனையோ அப்பாவிகளும் இன்று விடியாத சிறைகளிலே அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் போர் போர் என்று போர் நடைபெற்ற காலத்திலே சந்தேகம் என்ற பெயரிலும் விசாரணை என்ற பெயரிலும் எத்தனையோ அப்பாவிகளை சிங்கள இரானுவம் சிறைப்பிடித்துச்சென்றது.

இறுதியாக 2009ஆம் ஆண்டு தமிழர்களது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபோது எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் நிராயுதபானிகளாக சிறீலங்கா இராணுவத்திடம் சரனடைந்தார்கள் அவர்களை அவர்களது உறவினர்களே சிங்கள இரானுவத்திடம் ஒப்படைத்தார்கள் ஆனால் இன்று போர் முடிவுக்கு வந்து 5 ஆண்டுகள்  முடிவடைந்தும் அவர்களின் நிலை என்ன? என்பதனை இதுவரை சிறீலங்கா அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

உன்மையிலே கடத்தப்பட்டவர்கள் எத்தனைபேர் காணமல்போனோர் எத்தனைபேர் சரனடைந்தவர்கள் எட்தனைபேர் என்ற ஒரு சிறிய தகவலைக்கூட இதுவரைக்கும் சிங்கள ஆட்சிபீடம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை அதே வேளை நடந்து முடிந்த ஜனாதிபதித்தேர்தலின்போது மைத்தியை ஆதரிப்போம் என்று கூறிய எமது தலமைகள் குறைந்த பட்சம் எமக்காகப்போராடிய போராளிகளின் விடுதலையினையும் காரணம் இன்றி அடைத்து  வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையினையேனும் ஒரே ஒரு நிபந்தனையாக மைத்திரியிடம் முன்வைத்திருக்கலாம் ஆனால் அதனைச்செய்ய அவர்கள் தவறிவிட்டார்கள் அதற்கான பாவமும் பழியும் அவர்களையே சாரும்

ஆட்சிமாற்றம் வேண்டும் நல்லாட்சி வேண்டும் மாற்றத்திற்காக வாக்களிப்போம் என்று கூறி தமிழ்மக்களை நல்வழிப்படுத்தவேண்டிய தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்று பாழும் கிணற்றிலே தள்ளிவிட்டதா என்ற சந்தேகம் வலுவடைந்தே செல்கின்றது.

கடந்த தேர்தலிலே பழி உனர்வினை மாத்திரமே  மக்களிடத்தே தூண்டிவிட்டு மகிந்தாவை வீழ்த்துவோம் என்று கூறியவர்கள் மகிந்தா என்ற ஒரு இனப்படுகொலையாளியினை வீழ்த்திவிட்டு கூட்டுக்கொலையாளிகளான சந்திரிக்கா ரனில் மற்றும் சரத்பொன்சேகா ஆகியோரை ஆட்சிபீடம் ஏற்றியுள்ளார்கள் என்பதை மக்கள் இப்போதுதான் புரிந்துகொள்கின்ரார்கள்

மகிந்த அரசு வீழ்த்தப்பட்டு ஒருமாதம் கூட நிறைவடையவில்லை சரத்பொன்சேகா என்ற இனப்படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவருக்கு பதவிகள் கொடுக்கமுடியுமானால் எந்த பாவமும் செய்யாத அப்பாவித்தமிழர்களை ஏன் விடுதலை செய்ய முடியாது?

நீதியும் நியாயமும் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டும்தானா?

எத்தனை வருடங்களாக எங்கள் பிள்ளைகள் எங்கே எங்கே என்று வீதி வீதியாக அலைகின்றது ஒரு  கூட்டம் கண்ணீரும் கவலையும்தான் அவர்களின் வாழ்க்கையா? அப்பா வருவார் என்று காத்திருந்தே அப்பாக்களாகிவிட்டனர் எத்தனையோ  இளைஞர்கள் கணவன் வருவான் என்று வாசல்கதவுகளைப்பார்த்தபடி காத்திருக்கும் மனிவிமாரின் வேதனைகளை வார்த்தைகளால் கூறிவிட முடியுமா?

பிள்ளை எங்கே என் மகன் எங்கே என் மகள் எங்கே என்று தேடி தேடி அலைந்து திரிந்து கோவில்கள் எங்கும் தீபங்கள் ஏற்றும் தாய்மாரின் கண்ணீருக்கு எப்போது விடை கிடைக்கும்?

தமிழ்த்தேசியவாதிகளே!! எங்கே சென்றீர்கள்

நேற்றயதினம் யாழ்ப்பாணத்தில் காணமல்ப்போனவர்களின் உறவுகளால் ஒரு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது அதற்காக பத்திரிககள்மூலம் காணமல்ப்போனோரின் அமைப்புகளால் அரசியல் தலைவர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படிருந்தது குறித்த பேரணி யாழ் பேரூந்து நிலையத்தில் இருந்து 9மணியளவில் ஆரம்பமாகும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது ஆனால் பத்து மணியாகியும்  கானமல்ப்போனோரின் உறவுகளைத்தவிர எவரும் அந்த இடத்திற்கு வரவில்லை பொதுமக்களும் ஊடகங்களும் அங்கே நிறைந்திருந்த போதும்  எவருமே வரவில்லை இறுதியாக மக்கள் தாமாகவே பேரனியாக யாழ் மாவட்ட செயலகம் நோக்கி செல்வதற்கு தயாரன போது அந்த இடத்திற்கு  தமிழ்த்தேசிய மக்கள் முன்னனியின் செயலாளர் செல்வராசா கயேந்திரன் அவர்கள் வருகைந்ததிருந்தார் அவர் தலமையிலே பேரனி புறப்பட்டபோது  கஜதீபன் அவர்களுடன் இணைந்து கொண்டார் பேரணி வைத்தியசாலை வீதியினை கடந்தபோது திரு.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டனர் ஆனால் மிக் மிக வேதனையான விடயம் பேரணி சென்றுகொண்டிருந்தபாதையினால் தமிழரசு கட்சியின் தலைவர் தனது வாகனத்தில் வீதியினை தாண்டி  செல்வதனை பேரனியிலே கலந்து கொண்ட மக்கள் அவதானித்தனர்.

பிள்ளைகள் எங்கே பிள்ளைகள் எங்கே என்று கன்னீருடன் கதறி அழுதுகொண்டு செல்லும் அப்பாவி தாய்மார்ளை கண்டுகொள்ளாது கட்சியின் தலைவரே செல்கின்ற போது அந்த கட்சியினால் தமிழர்களுக்கு என்ன பயன் ? தமிழரசு கட்சி வெறும் ஏட்டுச்சுரக்காயா என்ற சந்தேகம் எழுகின்றது

பிள்ளைகளைத்தொலைத்துவிட்டு அலைந்து திரியும் தமிழர்களுக்கு அதரவும் பலமும் சேர்க்க வரமுடியாத தமிழ்த்தேசியவாதிகள் நேற்றய தினம் வலி  மேற்கு பிரதேசத்திலே பொது நூலக திறப்புவிழாவிற்கு சென்று மாலைகளை வாங்கிக்கொண்டுள்ளார்கள் இவர்களுக்கு மாலைகளும் மரியாதகளும் மட்டும்தான் தேவையா?

உன்மையிலே இவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையினை விரும்பி இருந்தால் நேற்றயதினம் நடந்தபேரணியிலே கலந்துகொண்டு வலுச்சேர்திருப்பார்கள் ஆனால் ஏன் அப்படிச்செய்யவில்லை இவர்களை யாரேனும் செல்லவேண்டாம் என்று தடுத்தார்களா?

அல்லது மைத்திரி அய்யா கோபித்துக்கொள்வார் என்று ஒதுங்கி நிற்கின்றார்களா தெரியவில்லை ஆனால் இதில் இரண்டில் ஏதோ ஒன்று உன்மையாக  இருக்கவேண்டும் காரணம் தமிழ்தேசியம் என்றும் தமிழினவிடுதலை என்றும் மேடைகளிலே முழக்கமிடும் தலைவர்கள் கடத்தப்பட்ட காணமல் போன அப்பாவிகளுக்காக குரல்கொடுக்க முன்வராதது இவர்களின் முகமூடிகளை கிழிக்கும் செயலாகவே உள்ளது இவர்களை விமர்சிக்க வேண்டும் என்பதற்காக இதனை குறிப்பிடவில்லை உன்மை என்ன?

யார் உன்மையானவர்கள் யார் போலியானவர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் மக்கள்

எங்கள் பிள்ளைகளின் விடுதலைக்காக குரல்கொடுக்க வாருங்கள் என்று உறவுகள் விடுத்த அழைப்பினை நிராகரித்து விட்டு ஒரு விழாவிற்கு சென்று மாலைகள் சூடிக்கொண்டது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு செயலா? அன்று முள்ளிவாய்காலிலே தமிழர் கொல்லப்பட்டபோது எப்படி கொழும்பிலேஉள்ள சிங்களவர்கள் வெற்றிவிழா கொண்டாடினார்கள் .

அதேபோலத்தான் இன்று யாழ்ப்பானத்திலே கண்ணீருடன் தமிழர்கள் வீதியால் செல்வதைபார்த்துக்கொண்டு தமிழரசு கட்சியின் தலைவர் மாலைகள் சூடிக்கொள்ள சென்றார் மக்களுக்கு குரல்கொடுக்க முன்வராத எமது மேடைப்பேச்சாளர்கள் எத்தனை பேர் நூலகதிறப்புவிழாவிற்கு சென்றார்கள் என்று பார்த்தபோது வேதனையாகவும் வெட்கமாகவும் உள்ளது

பொது நூலக திறப்புவிழாவிற்கு சென்ற மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன், க.சுரேஷ் பிரேமச்சந்திரன், சி.சிறிதரன், சித்தார்த்தன், அர்னோல்ட், விந்தன் கனகரத்தினம் இத்தனைபேரும் அந்த
பேரணிக்கு வந்திருந்தால் அது வலுவடைந்திருக்கும் ஆனால் இவர்கள் ஏன் வரவில்லை? உன்மையான தமிழ்த்தேசியவாதிகள் யார்?

ஒருவேளை பொதுமக்களால் இலங்கை அரசுக்கு எதிராகவோ அல்லது அபகீர்த்தியினை ஏற்படும்படி முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நிகள்வுக்கும் யாரும் செல்லக்கூடாது என்று கட்சியின் தலைமை முடிவு செய்து விட்டதா?

-கதிரவன்