சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரிசாக வென்ற ஒரு கிலோ தங்கத்தை தானம் செய்த ஈழத்து மாணவி ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யா நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

விஜய் டி.வி. சார்பில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா இரண்டாவது இடம்பிடித்தார்.

இதற்காக அவருக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அந்த மேடையிலேயே தமிழகம் மற்றும் ஈழத்தில் அனாதையாக தவிக்கும் குழந்தைகள் நலனுக்காக வழங்குவதாக ஜெசிக்கா அறிவித்தார்.

இந்நிலையில் ஜெசிக்காவுக்கு நடிகர் சூர்யாவிடம் இருந்து நேரில சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது. இதையடுத்து நடிகர் சூர்யாவை சந்திக்க சென்ற ஜெசிக்காவை, போட்டியில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

நடிகை ஜோதிகா கொடுத்தனுப்பிய சிறப்பு பரிசையும் ஜெசிக்காவுக்கு இந்த சந்திப்பின்போது சூர்யா வழங்கி பாராட்டினார்.

நடிகர் சூர்யாவை சந்தித்தது தனது வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு என்று ஜெசிக்கா தெரிவித்தார்.

நடிகர் சூர்யாவும் தனது அகரம் அறக்கட்டளை மூலம் பல்வேறு நலப்பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்