விடுதலைச் சுடர் பயணம் இப்போது யேர்மனியை வந்தடைந்ததுள்ளது

தமிழினவழிப்பிற்கு நீதி கோரி 04.02.2015 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைச் சுடர் பயணம் இப்போது யேர்மனியை வந்தடைந்ததுள்ளது அங்கு Münster), Osnabrück, Bremen, Hamburg போன்ற பல நகரங்களில் இது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

தமிழர்களின் விடுதலை சுடர் பயணமானது சிறிலங்காவின் சுதந்திர தினமான 04 பெப்ரவரி 2015 அன்று பிரித்தானியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை பிரதிபலித்து பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளினூடாக பயணம் செய்து இப்போது யேர்மனியை வந்தடைந்ததுள்ளது

முன்ஸ்டர் Münster ல் அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட விடுதலை சுடர் பயணத்தை வடக்கு மாகாண சபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்கள் சிற்றுரையுடன் சுடரேற்றி பயணத்தை தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து Osnabrück, Bremen ஊடாக பயணித்த விடுதலைச்சுடர் Hamburg தொடரூந்து நிலையத்தில் 14:00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி நகரத்தின் ஊடாக சென்றது. Hamburg நகரத்தில் வாழ்கின்ற தமிழ் இளையோர்கள் பலர் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டது குறிப்பிடத்தற்கதாகும்.

இறிதியாக ஆல்ஸ்டர (Alster) நகரத்தில் யேர்மனிய மக்களுக்கும் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.

18:00 மணிக்கு நிகழ்வுகள் உணர்புப்பூர்வமாக நிறைவடைந்தது. 03.03.2015 நாளை 15:00 மணிக்கு விடுதலைச் சுடர் பேர்லின் (Berlin) நகரத்தில் உள்ள பிரன்டன்புவர்க்கா டோவாவை வந்தடையும். அன்றைய தினம் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துக் கொள்ளுமாறு உரிமையுடன் வேண்டுகின்றோம்.