கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பழமைவாதக் கட்சியின் தலைவரின் தேர்வுக்கான தேர்தலில் அதிகளவிலான தமிழர்கள் அங்கத்துவத்தைப் பூர்த்தி செய்து தேசிய நீரோட்டத்தில் தங்களை இணைத்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக அங்கத்துவம் பெறுவது பற்றியும், தேசிய நீரோட்டத்தில் இணைவது பற்றியதுமான விளக்கங்களையும், தெளிவுகளையும் வழங்கியதன் மூலம் அவர்கள் இவ்வாறான முயற்சிக்குள் ஈடுபடுவதற்கு ஏதுவாக அனைத்து அமைப்புக்களுமே காரணமாக இருந்ததாக திரு. நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
தலைமைப்பதவிக்கான வேட்பாளர்களில் ஒருவராக தமிழர்களிற்காக குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் போட்டியிடுவதால் இதன் தாக்கத்தை உணர்ந்தும் பல தமிழர்கள் தாமாகவே வந்து அங்கத்துவ விண்ணப்பங்களை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

can-2

வழமைபோல அல்லாது இம்முறை துறைசார் நிபுணர்களும், தொழில்வல்லுனர்கள், மற்றும் வியாபரத்துறையில் முன்னிலை வகிப்பவர்கள் என சகலரும் தலைமைத்துவத்தை எடுத்து விளக்கவுரைச் செயற்பாட்டில் ஈடுபட்டதே பற்றிக் பிரவுணிற்கான ஒட்டுமொத்த அங்கத்துவப் படிவங்களிலும் 25 வீதம் தமிழர்களுடையது என்பதற்கான காரணமாகும் என அங்கத்துவ விளக்கக் குழுவின பொறுப்பாளரான திரு. பாபு நாகலிங்கம் தெரிவித்தார்.

கனடிய மனிதவுரிமை மையம், “Tamils For Patrick” என்ற பதாதகையின் கீழ் சுமார் 400 தொண்டர்களை இணைத்து மக்கள் உறுப்பினர்களாகச் சேருவதற்கான விளக்கங்களையும், தெளிவுகளையும் அவர்களிற்கு வழங்கியிருந்தது. தமிழர்கள் பெருமளவில் இவ்வாறு பங்கேற்பதும், அவர்கள் சுதந்திரமாக தங்குதடையின்றி தங்கள் தலைமைத்துவப் பண்புகளை வெளிவரச் செயற்பட்டதும் கனடிய அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுபற்றிக் பிரவுணிற்கான ஒட்டுமொத்த அங்கத்துவப் படிவங்களிலும் 25 வீதம் தமிழர்களுடையது என்பதே அதற்கான காரணமாகும்.

கனடாவின் பிரதான ஊடகங்கள் அணைத்தும் பற்றிக் பிரவுனிற்கு ஆதரவாக 40,410 அங்கத்துவர்களைத் திரட்டியதையும், அவருக்கு எதிரான வேட்பாளர்கள் முறையே 20,000 மற்றும் 6,000 வேட்பாளர்களைத் திரட்டியதையும் முதன்மைச செய்தியாக இன்று வெளியிட்டிருந்தன.

Saurce: canadamirror.com