சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தாயகத்திலும் புலத்திலும் மகளிர் அமைப்பினரால் கவனயீர்ப்பு

புலத்தில் (Oslo, Norway)
எதிர்வரும் 08.03.2015 அன்று Oslo தலைநகரில் நோர்வே பாராளுமன்ற முன்றலில், சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, நோர்வே பெரும் சமூகத்துடன் ஈழத்தமிழர்கள் நாமும் இணைந்து சிங்கள இனவெறி அடக்குமுறையின் ஆட்சியில் சொல்லணா துன்பங்களை அனுபவிக்கும் எமது உறவுகளான சகோதரிகளின் அவலத்தை உலகுக்கு எடுத்துரைக்க ஒன்றுகூடுவோம். சிங்கள இனவெறி அரசால் எமது உறவுகள் இன்றும் இழிவு வாழ்வில் தமது வாழ்க்கையை செலுத்துகின்றனர்.

இறுதி யுத்தத்தில் எமது சகோதரிகளுக்கு சிங்களராணுவம் இழைத்த மிருகத்தனமான கொடுமையை நாம் அனைவரும் நன்கறிவோம். தமிழ் பெண்கள் மீது சிங்கள அரசு முன்னெடுக்கும் பாலியல் வன்முறை ஈழத்தமிழர்களின் இன அழிப்பு வடிவங்களின் ஒரு வகையாகவே பார்கவேண்டும். ஆதலால் இந்த சர்வதேச பெண்கள் தினத்தில் தமிழ்ப் பெண்கள் உரிமையை வலியுறித்தி உரிமைக்குரல் கொடுப்போம் வாருங்கள்.

ஒழுங்குகள்: மகளிர் அமைப்பு நோர்வே

tko-7

தாயகத்தில்
மகளிர் தினத்தினை முன்னிட்டு யாழில் சுயதொழில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
(படங்கள் இணைப்பு)

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் வலி.மேற்கு பகுதியில் சுயதொழில் மற்றும் கைப்பணிப் பொருள் உற்பத்தி கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கண்காட்சி கடந்த 03.03.2015 ஆம் திகதி ( செவ்வாய்கிழமை ) வலி.மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நாகரஞ்சனி ஐங்கரன் தலைமையில் பிதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பல் துறைசார் உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.