16.03.15 – ஜெனிவா பேரணி – ஐ.நா முன்றலில் அலையென எழுவோம்! March 6, 2015 TCC எமது உரிமையை உலகறியச் செய்யும் வகையில் வருகின்ற 16 திகதி (16.03.15), நோர்வே வாழ் தமிழீழ மக்களாகிய நாம், ஐ.நா முன்றல் முருகதாசன் திடலில், அனைத்துலகரீதியில் வருகைதரும் தமிழ் உறவுகளுடன் இணைந்து உரிமைக்காக குரல் கொடுப்போம் வாருங்கள்! போராடுவோம்! இறுதி மூச்சுள்ளவரை, இலட்சியப் பயணத்தை தொடர்வோம்! போராடுவோம்! விடுதலைக்கான பாதையென்பது வீழ்ச்சிகளால் விலகுவதோ, துரோகங்களால் துவண்டுவிடுவதோ அல்லது பின்னடைவுகளால் பின்வாங்கி விடுவதோ அல்ல. மாறாக, தடைகளைத் தகர்த்து விழ விழ விடாமுயற்சியுடன் எழுவது. ஆகவே நாம் இன்றைய அவசர நிலையை கருத்தில் கொண்டு மக்களின் சக்தியோடு ஐநா நோக்கி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் அலையென எழுவோம்! . ஜெனிவா பேரணி காலம்: 16.03.2016 திங்கட்கிழமை நேரம்: 14.00 மணி தொடக்கம் 18.00 மணி வரை இடம்: ஐ.நா முன்றல், முருகதாசன் திடல் உங்களுடன் கல்விகற்கும், வேலைபார்க்கும் வேற்று நாட்டு நண்பர்களையும் இக் கவனயீர்ப்பில் கலந்து கொள்ள அழைத்து வாருங்கள்! விசேட போக்குவரத்துச் சேவை ஜெனிவா நோக்கி பயணமாகும் நோர்வே தமிழ் உறவுகளிற்கு மிக குறைந்த கட்டணத்தில் விமான நிலைய போக்குவரத்துச் சேவை செயப்படும் என்பதனையும் அறியத்தருகிறோம். தொடர்புகளிற்கு: தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கைத்தொலைபேசி: 462 29 999 / 413 69 881 “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” ஜெனீவாப் பேரணிக்கு அண்ணன் காசி ஆனந்தன் அழைப்பு நாம் ஒரு கொடுமையான காலத்தைக் தாண்டிக்கொண்டிருக்கிறோம். முள்ளிவாய்க்காலின் பின்னர் உலக அரங்கில் எமது போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது. எமது போராட்டம் உள்ளே நுழைந்ததோ இல்லையோ ஜ.நா வாசல் வரை வந்து நிற்கிறோம். இலங்கையில் நடந்த தேர்தலினால் ஒரு சரிவினைச் சந்தித்திருக்கிறோம். சிங்களவர்கள் உருவாக்கியுள்ள வியூகத்தில் மேற்குலகம் சிக்குண்டுள்ளது மட்டுமன்றி தமிழர்களை அதற்கு பயன்படுத்தி ஜ.நா அறிக்கை பிற்போட்டுள்ளார்கள். அவர் வழங்கிய நேர்காணலை இங்கே பார்க்கலாம்.