புலம்பெயர் மண்ணில் ஓர் கோரத் தாக்குதல்

புலம்பெயர் மண்ணில் மீண்டும் ஒரு வெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப் புக் குழுவின் பரப்புரைப் பொறுப்பாளர் திரு.மேத்தா (அரவிந்தன்) அவர்களே இனம் தெரியாதோரின் கோரத் தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள ஈழத்தமிழர் குழுக்களுக்கிடையில் மோதல் நிகழ்வுகள் அண்மைக்காலங்களில் மிகவும் அதிகரித்துள்ளன.

தமிழ் இன செயற்பாட்டு குழுக்களில் உள்ளவர்கள் தான் இப்படிப்பட்ட தாக்குதல்களிற்கு அடிக்கடி இலக்காகுகிறார்கள்

இதுகுறித்து மேத்தா அவர்கள் ரி.ரி.என் தொலைக்காட்சிக்கு வழங்கிய கருத்துக்கள்.