08.03.2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1400 மணிக்கு நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்னால் அனைத்துலக பெண்கள நாள் ஆரம்பமாகியது.இந்த கவனயீர்பு போராட்டத்தில் பத்தாயிரத்திற்கு மேற்ப்பட்ட பல்லின மக்கள் கலந்து கொண்டு பெண்கள் மீது நடாத்தப்படும் அடக்குமுறைக்கு எதிராக கோசங்களை எழுப்பியும் பதாகைகளை சுமந்தும் நின்றனர்.

குறிப்பாக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான சொற்கொட்டுக்களை அதிகமாக பார்க்கக்கூடியதாக இருந்தது.

பல்லாயிரம் மக்கள் சங்கமிக்கின்ற அனைத்துலக பெண்கள் நாளை நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு சரியான முறையில் பயன் படுத்தியது பாராட்டுதலுக்குரியது.

எமது தமிழ் பெண்கள் தாயகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை ஆனால் ஆட்சிகள் மாற்றம் அடைந்தற்கு பிற்பாடு சிங்களதேசம் மனிநேயத்தை நிலைப்படுத்தியுள்ளதாக மேற்குலகை ஏமாற்றி தன்னுடை வழமையான பொய் மூட்டையை உலகிடம் அவுழ்த்து கொட்டி வருகின்றது.

இந்த நிலையை மாற்றியமைக்கவும் சிங்களத்தின் முகத்திரையை கிழிக்கவும் இப்படியான போராட்டங்கள் மிகவும் பலமாக அமையும் என்பதில் ஜயம் இருக்கமுடியாது.
ஆகவேதான் இந்த போராட்டத்தின் ஊடாக நோர்வே தமிழ் மகளீர் அமைப்பு துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் பதாகைகள் ஊடாகவும் தாயகப்பெண்களின் அவல நிலையையும் மறுக்கப்பட்ட வாழ்வுரிமையையும் அம்பலப்படுத்தியுள்ளார்கள் அதுமட்டுமல்லாது ஜநாவின் அறிக்கை தாமதமின்றி வெளியிடப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்கள்.

இனிவரும் காலங்களில் தமிழ்மக்கள் இப்படியான போராட்டகளங்களுக்கு வலுவான பலத்தை வழங்குவதன் ஊடாக நிச்சயம் எமது மக்களின் அவலநிலையை இங்துள்ள அடித்தரமக்களுக்கு மிக இலகுவாக எடுத்துசெல்ல முடியும்