நோர்வேயில், ஈழத்தமிழர் மக்கள் அவையும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவும் இணைந்து அரசியற் பரப்புரை வேலைத்திட்டத்தை ஆரம்பத்துள்ளனர். நேற்றைய தினம் ஆரம்பித்த இப் பரப்புரை வேலைத்திட்டமானது, ஈழத்தமிழர்களினது சமகால அரசியல் நிலை தொடர்பாகவும் புலம்பெயர் மக்கள் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னனெடுக்கவேண்டும் போன்ற விடயங்ககளை உள்ளடக்கி ஒரு கலந்துரையாடலாக அமைந்திருந்தது

இவ்வாறான அரசியற் பரப்புரைகள் தொடர்ச்சியாக நோர்வேயில் நடைபெறும் என்பதை இவ் அமைப்புக்கள் அறிவித்துள்ள அதே நேரம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள மக்களவை மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு போன்ற தேசிய அமைப்புக்கள் இவ்வாற பரப்புரை வேலைத்திட்டங்களை மக்களிற்கு முன்னெடுக்குமாறு வேண்டுகோளும் விடுத்திருக்கின்றனர்.

போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.
– தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்