கிட்டதட்ட 17வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவின் ஈழ எதிர்ப்பு நடவெடிக்கையை கண்டித்து இன்று அமெரிக்க கொடி எரிக்கப்பட்டது. (இதே போன்றதொரு ஒரு முற்றுகை போராட்டத்தினை பு.இ.மு புலிகளை தடை செய்ததற்காக நிகழ்த்திக்காட்டியது எனத் தோழர்கள் பதிவு செய்தார்கள்).

10329277_10206229019667959_2732427434948326186_n11052527_10206229015987867_7843050282591404414_n

அமெரிக்காவின் பொருட்களான பெப்சி, கோக் போன்ற பொருட்கள் தோழர்களால் உடைத்து எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது. ஈழப்படுகொலையில் ரத்தக்கறையொடு அலையும் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமெரிக்காவின் மீதான பொருளாதார புறக்கணிப்புதுவக்கப்படுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவெடிக்கைகள் சர்வதேச விவாதங்கள் ஐ.நா மனித உரிமைக் கமிசனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் எதிர்க்கப்படுதல் அவசியம்.

https://www.facebook.com/video.php?v=803235773080334&pnref=story

அமெரிக்க தூதரக முற்றுகை: 25க்கும் மேற்பட்ட இயக்கங்கள் தங்களது ஆதரவினை வழங்கியது.
மதிமுகவின் மல்லை சத்யா,
எஸ்டிபிஐ கட்சியின் தெகலான் பாகவி,
மனிதநேய மக்கள் கட்சியின் ஹாருன் ரஷித் ,
த.ஓ.வியின் தோழர்.பொழிலன்,
தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தோழர் அரங்க குணசேகரன், தற்சார்பு விவசாயிகள் இயக்கத்தின் தோழர். கி.வெ.பொன்னைய்யன்,
த.பெ.திகவின் தோழர். குமரன்,
பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தின் தோழர். லெனின், தமிழ்புலிகள் கட்சியின் தோழர். நாகை திருவள்ளுவன், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் தோழர். குருசாமி,
தமிழர் விடுதலை கழகத்தின் தோழர். சுந்தரமூர்த்தி,
தமிழக விடியல் கட்சியின் டைசன் , இளமாறன், பாபு, மக்கள் விடுதலை இயக்கத்தின் தோழர். ரவி,
இசுலாமிய ஜன்நாயக முன்னனியின் நாசர் தீன் ,
தமிழ் இளைஞர் மாணவர் கூட்டமைப்பு தோழர்கள் பிரபாகரன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் தோழர்.பன்னீர், மற்றும் எண்ணற்ற தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று கைதானார்கள்.

இந்த அமைப்புகளின் பங்கேற்பே இப்போராட்டம் வலிமையடைந்ததற்கான காரணங்கள். இந்தியா-இங்கிலாந்து-அமெரிக்கா ஆகியவற்றினை அம்பலப்படுத்துவதும் அதன் மீதான விசாரனையை கோருவதும், பொருளாதார புறக்கணிப்பினை பிரச்சாரப்படுத்துவதும் ஈழ விடுதலைக்கு துணை நிற்கும் ஆகப்பெரும் நடவெடிக்கைகள்.

வரும்காலத்தில் இந்த நாடுகளின் மீதான போராட்டத்தினை தீவிரப்படுத்துவோம்.

மே பதினேழு இயக்கம்.