உலக ஐஸ் கொக்கி விளையாட்டில் ஈழத்துச் சிறுவன் சாதனை March 16, 2015 News swiss jura தேசிய ஐஸ் கொக்கி கழகத்தில் mini top பிரிவில் பந்து காப்பாளராக 13 வயதான அஸ்வின் சிவசுப்பிரமணியம் விளையாடி வருகிறார். இவர் பெப்ரவரி 9 முதல் 17 வரை canada bantiam grandby யில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் கொக்கி u 14 பிரிவு போட்டியில் team swiss அணி பந்து காப்பாளராக விளையாடியுள்ளார். இதில் சுவிஸ் அணிச் சம்பியன் கிண்ணத்தையும், நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அஸ்வின் இரண்டாவது சிறந்த பந்து காப்பாளர் என்ற பட்டத்தையும் வென்று அனைவரினது பாராட்டையும் பெற்றுள்ளார். அஸ்வின் team swiss அணிக்காக விளையாடுவது இது முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சுவிஸில் முன்னணி கழகங்களின் ஒன்றான ehc bienne (lna) mini top வழி வழி பிரிவில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். -உதயன்-