தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். March 16, 2015 News தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.ந முன்றலில் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் உரிமை முழக்கத்துடன் ஒன்று கூடியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை கட்டி இழுந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டியதுடன், “ we want tamil ealam” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.