இறுதி யுத்தம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் ஜெர்மனி அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சிறிலங்காவில் இருக்கும் ஜேர்மனியின் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு விஜயம் செய்திருந்த ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் கடந்த சில நாட்கள் வடக்கில் தங்கி இருந்து நிலமைகளை அவதானித்துள்ளார்.

மறுசீரமைப்பு, நல்லிணக்க செயற்பாடுகள் என்பன துரிதமாக இடம்பெற செய்யப்பட வேண்டும்.

அதேநேரம் இறுதி யுத்தம் குறித்த விடயங்கள் தொடர்பாக விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.