பாடசாலை  நீரத்தாங்கயில் பூச்சிமருந்தை கலந்து மாணவர்களை கொள்ள முயன்ற விசமிகளை கைது செய்யக்கோரியும் அசுத்தமடைந்துள்ள நிலத்தடி நீரினை சுத்தமாக்குமாறு கோரியும் ஏழாலை பாடசாலை மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.குறித்த பாடசாலையில் நேற்றைய தினம் இனந்தெரியாத விசமிகள் நீர்த்தாங்கியில் பூச்சிமருந்தை கலந்தமையால் இருபத்தியாறு மாணவர்கள் சுகவீனமுற்ற நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் சிகிச்சை முடிவுற்று இன்னமும் வீடு திரும்பாத நிலையிலேயே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஒன்பது மணியளவில் ஏழாலை மயிலங்காடு ஸ்ரீ முருகன் வித்தியாலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் பேரணியாக சுன்னாகம் பஸ் நிலையத்தினை வந்தடைந்தது.
பஸ் நிலையத்தில் மாணவர்கள் கோசம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, அரசியல் பழி வாங்கல்களுக்கு மாணவர்களா பலிக்கடா? பச்சிளம் பிள்ளைகளினை நீரில் நஞ்சு கலந்து கொல்ல முயன்ற படுபாதகனை கைது செய்யுங்கள். அறிக்கை புலன்விசாரணை என காலத்தை இழுத்தடிப்பு செய்யாமல் உடனடியாக விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை கைது செய்யுங்கள்.
நீர்த்தாங்கி நீர் எமக்கு வேண்டாம் மாசடையச்செய்த எமது நிலத்தடி நீரினை சுத்தப்படுத்தி தாருங்கள். பச்சிளம் குழந்தைகளினை கொள்ள துணிந்தவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும். அரசே வாய் மூடி மௌனாமாய் இருக்காமல் பதில் கூறு. என எழுதப்பட்ட பாதாகைகலினை ஏந்தியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணியில் பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினர் என ஆயிரகணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர். இதேவேளை இதற்கானா தீர்வு குறுகிய நாட்களிற்குள் தரப்படாவிட்டால் மீண்டு அனைத்து பாடசாலை மானவர்களினையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுப்போம் என குறித்த ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.