தயாருடன் வீடு செல்ல விபூசிகாவுக்கு கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்று கிளிநொச்சி நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கை விசாரணை செய்த நீதியாளர் எம்.ஜ.வகாப்தீன் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை தயார் ஜெயக்குமாரியுடன் செல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்.

பாலோந்திரன் ஜெயக்குமாரி கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் பயங்கரவாத குற்ற வழக்கை பதிவு செய்திருந்தனர். தற்போது இந்த வழக்கை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் பின்வாங்கியதை அடுத்தே விபூசிகாவை அவரின் தயாருடன் செல்ல கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.