தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா கடந்த வாரம் சமகால அரசியல் விடயங்கள் சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக நாம் எமது கருத்தை கூற வேண்டிய தேவையும் அவசியமும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அண்மைக்காலமாக சிலர் கடுமையான கோசங்களை எழுப்பி வருகின்றார்கள்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய முண்ணணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டு கருத்துக் கூறுகையில்:-

ஒரு நாடு இரண்டு தேசங்கள் எனக் கூறி வருகின்றார்கள் இவர்கள் குறிப்பிடுவது தமிழர் பகுதி ஒரு தேசம் சிங்களப் பகுதி ஒரு தேசம் இந்த இரண்டு தேசங்களும் இணைந்துதான் ஒரு நாடு எனக் கூறுகின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கோசங்களினால் நாம் எதனையும் சாதித்து விடப்போவதில்லை உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கின்றன அங்கு சமஷ்ஷ முறையிலான ஆட்சி நடை பெறுகின்றது. அது போன்றே கனடா ஜேர்மன் சுவிஸ் போன்ற நாடுகளிலும் கூட மாநில சுயாட்சி அடிப்படையில சுய நிர்ணய உரிமையுடன் அங்கு வாழும் மக்களம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் பிரிவினை வாதத்தின் மூலம் எதனையும் சாதித்தவிட முடியாது.

தமிழர் ஒரு தேசம் என்ற நிலைப்பாடு தமிழ் தேசிய முன்னனி முன்வைத்த விடயம் அல்ல இதனைத் திம்பு மாநாட்டில் தமிழ் மக்களின் அனைத்து கட்சிகளும் இணைந்து முன்வைத்த விடயமாகும் இதனை திம்பு மாநாட்டில் சமர்ப்பித்த விடயங்கள் எடுத்துப் பார்த்தால் தெரியும்.

தமிழ் ஒரு தேசம் என்ற விடயம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் ஒரு தேசம் என்ற வகையில் தான் தமிழர்களுக்கு தாயகம் இருப்பதன் அடிப்படையில் தான் சுய நிர்ண்ய உரிமையும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்தேசிய அரசியலில் இந்த நிலைப்பாடுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாட்டைக் கைவிட்டு தமிழ் தேசிய வாதத்தை முன்கொண்டு செல்ல முடியாது தமிழ்த் தேசிய வாத்திற்கும் தமிழுக்கும் இடையில் உள்ள உறவுகள் இதுதான்.

வெறும் கோசங்கள் எதனையும் சாதிக்க முடியாது எனக் கூறுவதாக இருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய வாதத்தை கைவிட்டு செல்கின்றார்கள் என்பதே உண்மையானதாகும்.

தமிழ் தேசிய வாதம் இல்லையென்றால் தமிழர் ஒரு சிறுபான்மையென்பதன் அடிப்படையில் தான் செயல்பட முடியும். சம்பந்தன் ஐயாவும் ஏனையவர்களும் சிங்கக் கொடியை ஏற்றுதல் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தில் கலந்து கொள்ளுதல் அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்குதல் என்பன எல்லாம் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை தேசிய வாதத்தை கைவிட்டு சிறுபான்மை இனமாக செயற்பட தீர்மானித்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு நாடுகளும் இணைந்து ஒரு நாடு என்றால் இது பிரிவினை வாதம் அல்லவே பிரிவினை வாதத்தை வலியுறுத்துபவர்கள் இன்று அரசாங்கத்தினால் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டு விடும் என்பது சட்டமாகும் இதனை முன்னிலைப் படுத்தி பொய்யான பிரச்சாரத்தை தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னெடுத்து ஒரு அரச பயங்கர வாத்தை நடத்தி மக்களை அச்சுறுத்தி வருகின்றது.

சிறீலங்கா அரசாங்கத்தில் ஒரு நீதியரசராக கடமையாற்றிய நீதிபதி விக்கினேஸ்வரன் ஐயாவும் கூட இதனை வலியுறுத்தி வருகின்றார். அவர் சட்டம் தெரியாதவரும் அல்ல சட்டத்திற்கு மதிப்பளிக்காது செயல்படப் போபவரும் அல்ல.

தேசம் என்பது இல்லையாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தேசம் என்பதற்கு இடமிருக்கமாட்டாது. தேர்தல் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று பேசுவது வெறுமனே கோசமா? இது கொள்கை ரீதியாக இல்லையா?

இன்று மக்கள் இவைகளை புரிந்துகொண்டுள்ளார்கள் என்ற அடிப்படையில் தான் சம்பந்தன் ஐயா மக்களை வேறுபடுகின்றார். சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஜனாதிபதியினால் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் சம்பந்தமான தீர்வுகளை எட்டவதற்கான செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தான் இதில் நம்பிக்கை வைத்தள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சந்திரிகா ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் மிக நேர்மையாக செயற்பட்டு தீர்வு காண முயற்சித்தாகவும் அது தூர் அதிஸ்ட வசமாக முன்னெடுக்க முடியாது பொய்விட்டதாகவும் கூறியுள்ளார்.

அன்ற சந்திரிகா அரசாங்கத்துடன் எத்தளவுக்கு நெலுக்கமான உறவை சந்திரிகாவுடன் கொண்ட இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சந்திரிகா அம்மையார் இன்று வாக்கு எடுத்தது தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்ற அடிப்படையில் தான் வாக்ககளை பெற்றார்.

இன்று மைத்திரி வாக்குகளை எடுத்தது இராணுவத்தை காப்பாற்ற வேண்டும். இனப் கொலைக் குற்றம் எதுவும் இடம் பெறவில்லை. தமிழ் மக்குளுக்கு 13 வது அரசியில் அமைப்புக்க மேல் எதனையும் வழங்க முடியாது என்ற அடிப்படையில் தான் வாக்ககளை பெற்றுள்ளார்.

உண்மையில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமாக ஈருந்தால் தீர்வுகளை முன்வைத்து இருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை இயக்கத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிக்கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்த நடவடிக்கைகளை மேற்க்கொண்ட நிலையில் இயக்கம் ஒரு எல்லையை தீர்மானித்த சண்டை ஆரம்பிக்கும் நிலையில் தீர்வுகளை முன்வைக்க முன் வந்தார்.

இயக்கமும் தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டு போர் முன்வைத்த நிலையில் தான் தீர்வு முன்வைக்கப்பட்டு இதற்கு பக்க பலமாக இருந்தவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் ஐயா உட்பட ஏனையவர்களும் தான்.

இயக்கத்தை தனிமைப்படுத்தி ஏனைய அமைப்புக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் எனக் காட்ட முழுமையாக செயற்பட்டவர்கள் தமிழர் விடுதலைக்கூட்டணி உட்பட முழ ஆதரவையும் பெற்றுத்தான் இயக்கத்தை ஓரம் கட்ட சர்வதேச மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இன்று சந்திரிகா அம்மையார் அன்று தமிழர் பற்றி பேசியது எல்லாம் உலகத்தை ஏமாற்றவும் தமது நலனை முன்னிறுத்தியுமே இடம் பெற்ற நிகழ்வாகும்.

இன்று சமஷ்டி பற்றியோ சுய நிர்ணயம் பற்றியோ பேசுபவர்கள் யாரும் இல்லை. இன்றைக்கு பங்காளிக் கட்சியாக சந்திரிகாவை ஆதரித்தவர்களும் கூட ஒற்றை ஆட்சி பற்றியே பேசுகின்றார்கள். சிங்கள மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு மேல் தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கப்போவதில்லை.

அன்று சந்திரிகா அம்மையாருக்கு ஒத்துழைப்பைக் கொடுத்திருந்தால் செய்திருப்பார் என்று கூறுவது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு விடயமாகும். ஜனாதிபதி தேர்தலில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

தற்போது இதனை செய்யமுடியாதது ஏன் என்றால் ஆட்சி மாற்றத்திற்கு தமிழ் மக்களுடைய வாக்குகள் பெற்றால் மட்டுமே மாற்றத்தை கொண்டுவரலாம் என்ற நிலமை அனைவருக்கும் தெரிந்த விடயமாகும் இந்த வகையில் தேர்தலுக்கு முன்னர் உரிய முறையில் பேரம்பேசி இருந்தால் இன்று அது வெற்றி பெற்று இருக்கும்.

தமிழ் மக்களுடைய நலனை முன்னிறுத்தாமல் சிங்களத் தலைமைகள் தமது நலன்களை பேண எமது வாக்குகளைப் பயன்படுத்துமாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.

தேர்தலில் பேரம்பேசி விட்டு எமது மக்களை வாக்களிக்கச் சொன்னால் எந்த பாதிப்பும் இல்லை வாக்களிக்கச் சொல்லி விட்டு இன்று சந்தர்ப்பத்தை கைவிட்டுவிட்டு ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது என்றால் இது ஒரு பாரிய பொய்யாகும்.

இன்று சர்வதேச நாடுகள், ராஜதந்திரிகள் வடக்கு கிழக்கிற்க்கு வந்து கூறுவது எதனையும் கேட்காதீர்கள், குழப்ப வேண்டாம், அமைதியாக இருங்கள், இது ஒரு நல்லாட்சி, நீங்கள் எதனையும் கேட்டால் சிங்கள மக்கள் குழம்பி விடுவார்கள் எனக் கூறுகின்றார்கள்.

குழப்பங்கள் ஏற்பட்டால் இந்த ஆட்சி பலவீனப்படும் அதன் மூலம் மீண்டும் ராஜபக்சா ஆட்சி வந்துவிடும் என்ற கூறுகின்றார்கள். எமது நிலைப்பாட்டைக்கூட வலியுறுத்த முடியாவிட்டால் எமக்கு எப்பொழுது சந்தர்ப்பம் வரும் என்பதை சம்பந்த்ன ஐயா குறிப்பிட வேண்டும்.

நாம் சர்வதேச நாடுகளைக் கையா வேண்டும் அதைவிடுத்தது அவர்களுடைய எண்ணங்கள் சிந்தனைகளுக்கு செயற்பட்டு கடந்த அறுபத்தைந்து வருடங்களாக அழிந்து சந்திக்க வந்து நடுத்தெருவில் நிற்கும் நிலமை போதுமானதாகும். எதிர் காலத்தில் நாம் எமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப் அவர்களைச் செயலபடுத்த வேண்டியது முக்கியமாகும்.

நாம் என்றும் இந்தியாவுக்கோ அன்றி சர்வதேச நாடுகளுக்கு என்றும் எதிரானவர்கள் அல்ல. எம்மையாரும் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தவும் அனுமதிக்க முடியாது. அதற்கு நாம் யாரும் பலயாகிக் கொள்ளவும் கூடாது எனவும் குறிப்பிட்டார்.

இந்த சந்திப்பில் செயலாளர் செ.கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் சட்டவாளர் மணிவண்ணன் ஆகியவர்களும் கலந்துகொண்டார்கள்.

நன்றி:பதிவு