மாற்றத்திற்கான பத்திரிக்கையாளர்கள் நடத்திய ‘ஊடக கருத்து சுதந்தரம்’ பற்றிய கருத்தரங்கில் தி இந்து ‘என்.ராம்’ பேசிய பொழுது , பத்திரிக்கையாளர்கள் கவர் நன்கொடையைப் பெற்று எழுதுவதை தவிர்க்க வேண்டுமென்றும், அவர்கள் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்பதை மறுக்க இயலாது என்றாலும் ‘பணம் பெற்று எழுதும் -பெய்ட் ஜர்னலிசத்தினை’ எதிர்க்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

சாத்தான் வேதம் ஓதி இருக்கிறது.

25 ஆண்டுகளாக இலங்கை அரசின் கொள்கைகளை , கொலைகளை நியாயப்படுத்தி பேசிய என்.ராம்முக்கு ‘லங்கா ரத்னா’ விருது, ஆசியாவின் சிறந்த பத்திரிக்கை விருது என இலங்கை அரசு கொடுத்திருக்கிற விருதுகளும், அதன் பின்னனியில் இருக்கும் ‘கவர் நன்கொடை ஜர்னலிசத்தினைப் பற்றி’ இனிமேலும் தமிழக பத்திரிக்கை நண்பர்கள் பேசாமல் இருந்தால் சாத்தான் வேதம் ஓதிக்கொண்டே இருக்கும் தான்.

ஒரு இனப்படுகொலையை ஆதரித்து அதன் புகைப்படங்களை வெளியிட மறுத்து ராஜபக்சேவிற்கு வக்காலத்து வாங்கியதைப் பற்றி வெட்கமே இல்லாமல் ஊடகவியலாளர்கள் மேடையில் பேசிய என்.ராம் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தின் பல ஊடகவியளால தோழர்கள் இலங்கை அரசின் நயவஞ்சக நன்கொடை சூதிற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையை அம்பலப்படுத்திய எம் பத்திரிக்கை தோழர்கள் மிக எளியவர்கள், ஆனால் வலியவர்கள். தனது வாழ்வை வளம்பெற வைப்பதற்காக என்.ராமைப் போன்று ஈனத்தனமான ’பெய்ட் ஜர்னலிசத்தினை’ செய்பவர்கள் அல்ல அவர்கள்.

சீன அரசிடமும், அமெரிக்க அரசிடமும், இலங்கை அரசிடமும் செல்லப்பிள்ளைகளாக இருந்து தி இந்து என்கிற தனது வணிகத்தினை வளர்க்கும் என்.ராம் தமிழகத்தின் எந்த ஒரு மேடையிலும் ஏறத்தகுதியானவர் அல்ல. ராஜபக்சேவை மேடையேற்றுவதும், என்.ராமினை மேடையேற்றுவதும் ஒன்றே..

என்.ராமின் பொறுக்கித்தனமான அரசியலை வரும் பதிவுகளில் எழுதுலாம் என்றிருக்கிறேன்.

தோழமைகளின் கருத்தரங்கு என்பதால் மெளனம் காத்தோம் என்பதை என்.ராம் தெரிந்து கொள்ளட்டும். இல்லையெனில் கருத்தரங்கில் இருந்து வெறும் காலுடன் வீட்டிற்கு வருவதை பெருமையாகவே கருதுகிறோம்.