ஈழத்தமிழர்களுக்காக லண்டன் ரெட்பிரிஜ் பெருநகரம் தீர்மானம் நிறைவேற்றம்! April 4, 2015 News சிறிலங்காவின் யுத்தக்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று லண்டன் ரெட்பிரிஜ் பெருநகர சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. கன்சர்வேட்ரிவ் குழுத் தலைவர் போல் கெனலினால் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக பல தசாப்தகாலமாக இனவழிப்புகள் இடம்பெற்று வருகின்றன. அவர்களை சிங்கள அரசாங்கங்கள் அடக்கி ஆள முற்படுகின்றன. இந்த நிலையில் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை உறுதி செய்யும் வகையிலான சர்வதேச நடவடிக்கைககளுக்கு பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.